Headlines

வரலாற்று வீரா்களின் வரிசையில், மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் – ஒமல்பே தேரர்

வரலாற்று வீரா்களின் வரிசையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரும் இணைக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர்  ஒமல்பே  தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். 30 ஆண்டு காலமாக நீடித்து வந்த போரை ஜனாதிபதி நிறைவுக்குக் கொண்டு வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி வகித்த ஜனாதிபதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரபாகரனை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து தேசத்தின் எதிர்காலத்தை…

Read More

பாராளுமன்றில் தடால் – புடால்?

அனுர குமார திசாநாயக்க; இப்படியான ஒரு பதவி தேவையா?? ஒரு தனிப்பட்ட மனிதர் ஒரு மாபெரும் பணத்தொகையை வீணடிக்கும், ஒரு மாபெரும் தொகையை செலவழிக்கும் ஒரு ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த நடப்பாண்டின் கணக்குப்படி ஒரு நாளுக்கான செலவு இருநூற்று அறுபத்து இரண்டு இலட்சங்கள். இதை எப்படி செலவழிப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள். ஐயாயிரம் ரூபாய் தாள்களாக மாற்றி சாப்பிடுகின்றார்களோ தெரியாது!!! காலையில் ஐயாயிரம் ரூபாத்தாள் சம்பல், இரவுக்கு சொதி என்று சாப்பிடுவார்களோ தெரியாது!! யோசித்துப்பாருங்கள் இந்தளவுக்கான…

Read More

சகோதரியின் 2 கால்களையும் வெட்டி, ஒரு காலை எடுத்துச்சென்ற சகோதரன்

தனது சகோதரியின் இரு கால்களையும் வாளால் வெட்டி  ஒரு காலை எடுத்துச் சென்ற  கோர சம்பவமொன்று பலாங்கொடை தெஹிகஸ்தலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான பெண் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நீண்ட கால குடும்பத்தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. காலை வெட்டிய  சகோதரனும்  அவரது மகனும் தலைமறைவாகியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கலக்கமா மயக்கமா ? தெளிவு பெறுங்கள் என்று….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் உங்களை விளிக்கிறார் . உங்களைப் பார்த்து கூறிகிறேன் : STAND UP AND BE COUNTED சில நாட்களாக கிழக்கில் முஸ்லிம்கள் யாருக்கு ? என்ற சொல்லை வைத்துக் கொண்டு கையில் பொல்லு ஓன்று மட்டும் இல்லாத குறையாக அறிவியல் ஜானத்தில் பூச்சியம் என்று மக்களால் முத்திரை குத்தப் பட்ட சில அரசியல் வாதிகளின் அம்புலி மாமா கதை…

Read More

மரண தண்டனை கைதிகளை பார்வையிட்ட இந்திய தூதுவர்

இந்திய மீனவர்கள்  ஐவருக்கு  அண்மையில் இலங்கை நீதிமன்றினால் மரணதண்டனை வழங்கி தீர்பளிக்கப் பட்டிருந்தது. குறித்த  மீனவர்களைப் பார்வையிட இன்று வெலிக்கடை  சிறைக்கு   சென்ற  இலங்கைக்கான  இந்திய தூதுவர் Y.K.சிங்ஹா மரண தண்டனை கைதிகளை பார்வையிட்டு அவர்களுடன் உரையாடியபின்  சிறைச்சாலையில் இருந்து வெளியேறியபோது…… பட  உதவி – இந்திய தூதரகம்

Read More

கொஸ்லாந்தை வீதியில் பாரிய வெடிப்பு (Breaking News)

கொஸ்லாந்தை, பூனாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சீனாவின் கேளிக்கை பூங்காவில் 8 வயது சிறுமியை புலி கடித்து கொன்றது

சீனாவின் தென் மேற்கில் உள்ள சாங்கிங் நகரில் லேகெலுடு என்ற இடத்தில் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு 8 வயது சிறுமி தனது உறவினர்களுடன் சென்று இருந்தாள். பல இடங்களுக்கு சென்ற அவர்கள் அங்கு நடந்த சர்க்கசை பார்க்க சென்றனர். அவர்களுடன் சிறுமியும் சென்று இருந்தாள். அப்போது அங்கு புலிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தனர். அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி புலி நடமாடிய பகுதிக்குள் தவறி விழுந்தாள். உடனே அவளை அந்த புலி பாய்ந்து கடித்து…

Read More

உயிர்களை பறிகொடுத்த மலையக மக்கள் விடுக்கும் அவசர கோரிக்கை

பதுளை-மீறியபெத்தை இடம்பெற்ற மண்சரிவினைத் தொடர்ந்து தமக்கு பாதுகாப்பான சொந்த வீடு, சொந்த காணி வேண்டும் என்ற குரல் மலையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கிவிட்டன. அண்மையில் கொஸ்லாந்தை மீறியபெத்தை தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்து மலையகத்தின் பல்வேறு தோட்டப்பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், அஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் மலையக மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த மலையக மக்களும் கோரிக்கை…

Read More

சர்வதேச விசாரணை நிறைவு- இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்குமா?

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும். எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் பேரவை இறுதித்…

Read More

மீனவர்களே அவதானம்: அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மரண தண்டனை கைதிகள் பரிமாற்றம் – இன்று விசாரணை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்த மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி எஸ் எம் ஆனந்த முருகன் தாக்கல் செய்த இந்த மனுவில் இரண்டு நாடுகளும் செய்து கொண்டுள்ள கைதி பரிமாற்ற உடன்படிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த ஐந்து மீனவர்களும் இந்தியாவின் கரையில் இருந்து 12 கிலோ மீற்றருக்குள்…

Read More

பிரான்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு மருந்து வெற்றி!

பிரான்ஸில் உள்ள மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டெங்கு காய்ச்சலுக்கான மருந்து வெற்றியடைந்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு எந்தவித மருந்துமின்றி உயிரிழப்பு அதிகம் நேர்ந்து கொண்டிருக்கிறது.  இந்நிலையில்தான் உலகம் முழுக்க கொசுக்களால் உண்டாகும் டெங்கு காய்ச்சலுக்கு ஃபிரான்ஸ் மருந்து நிறுவனம் ஒன்று டெங்கு மருந்து கண்டுப்பிடித்து உள்ளது. இந்த நிறுவனம் கண்டுப்பிடித்த மருந்து சக்சஸ் ஆகியதைத் தொடர்ந்து 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்து பரிசோதனை செய்துப் பார்த்ததில் அவர்கள்…

Read More