News
எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!
எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார். இதன்படி உயர் கல்வி…
இலங்கையின் ஐ.நா. மீதான தாக்குதலுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தரப்பினரை அடக்கி ஒடுக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீதான தாக்குதலுக்கு நிகரானது. இதனை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள்; ரணில் குற்றச்சாட்டு
18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு தேர்ச்சி அவசியம்.இந்த தேர்ச்சி இல்லாத பட்சத்தில் அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. தற்போது அதுதான் நடந்திருக்கிறது. 18ம் திருத்தச்சட்டம் தயாரிக்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. எனினும் அவற்றில் குழப்ப நிலை உருவாகி இருக்கிறது. இந்த குழப்ப நிலைகள்; விரைவில் வெளியில் வரும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சம் காரணமாக நீதிமன்றத்தை நாடிய மகிந்த; சரத் என் சில்வா
3வது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியுள்ளார் என பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்க முடியுமா மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்விகளையே அவர் தற்போது எழுப்பியுள்ளதாகவும். சட்ட விளக்கம் கோரப்பட்ட இரண்டு கேள்விகளும் தனிப்பட்ட ரீதியானதே தவிர, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் கேட்கப்படவில்லை அத்துடன் சட்ட…
தலாய் லாமாவுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை – சீன அதிகாரிகள்!
சீனாவில் இருந்து நாடு கடத்தப் பட்ட திபேத் புத்த மத ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா மீது ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப் படும் என சீன அரச அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பீஜிங் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக தலாய் லாமாவுக்கு விசுவாசமாக உள்ள சீன கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்கள் தண்டிக்க படுவர் என புதன்கிழமை மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சிகளின் உட்துறை கண்காணிப்பகத்தின் தலைவர் யே டொங்சொங் ஆங்கில மொழியிலான கம்யூனிசக்…
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியவர்கள் ஏமாற்றடைந்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முன்னமே அதன் பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று புதன்கிழமை பொது அரச உத்தியோகர்களுக்கு மோட்டார் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி…
நீர்கொழும்பில் பதற்றம்!
நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக…
மஹிந்தவுக்கு முடியுமா..? முடியாதா..?? உயர்நீதிமன்றத்தில் திறந்த விவாதத்தை கோரும் சட்டத்தரணிகள்
18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் திறந்த விவாதத்தை உயர்நீதிமன்றத்தின் ஊடாக கோருவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட முழுமையான குழாம் ஆராயவிருப்பதாகவும் நீதிமன்றத்தின்; வியாக்கியானம் என்பன ஜனாதிபதி காரியலாயத்துக்கு…
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் புனித குர்ஆனை வீசி எறிந்து இஸ்ரேலிய இராணுவம் அட்டகாசம் (photo)
முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இஸ்ரேலிய இராணுவம் இன்று அட்டகாசம் செய்துள்ளது. 1967 இல் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலை ஆக்கிரமித்து பல்வேறு ஆட்டூளியங்க்களை புரிந்து வரும் இஸ்ரேலிய இராணுவம் முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுவதையும் தற்போது தடை செய்துள்ளது. அதனை தொடர்ந்து பாலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது கல் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இஸ்ரேல் போலீசார் மற்றும் இராணுவத்தினர் சப்பாத்துக் காலுடன் பள்ளிவாயளுக்குள் நுழைந்து தளபாடம், கட்டிடத்தை உடைத்ததுடன்,…
14 வயது மகளை கற்பழித்தவனை விருந்துக்கு அழைத்து சித்தரவதை செய்து கொலை செய்த தந்தை
தனது மகளை கற்பழித்த குற்றவாளியை தந்தை விருந்துக்கு அழைத்து சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:- டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டைசேர்ந்த 45 வயதுகாரரர் கற்பழித்து உள்ளார். பாதிக்கபட்ட சிறுமியிடம் இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.ஆனால் இது குறித்து அன்றைய தினமே சிறுமி தந்தையிடம் கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை நிதனாமாக திட்டம் தீட்டி உள்ளார்….
விரல் சொடுக்கும் வடகொரியா
கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு…
