News
மீனவர்களிற்கு தூக்கு : திங்கள் மேல் முறையீட்டு மனுதாக்கல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளது. இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்களும் போதை பொருள் கடத்தியதாக இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் 5 மீனவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்து விடுதலை செய்யக் கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்வதாக இருந்தது….
இலங்கை மீது ஐ.நா. கடும் அதிருப்தி!
இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நம் பகத்தன்மை மீது இலங்கை அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் யயிட் அல் ஹுஸைன் நேற்றைய தினம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வரும் மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் தனிநபர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்கும் முயற்சிகளையும் அவர் கண்டித்துள்ளார். “”விசாரணைகள்…
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விளையாட்டு தளபாடங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் கையளிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியில் ஏறாவூர் நகர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள் உட்பட 19 அமைப்புக்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்பட்ட 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு…
பொது வேட்பாளர் கரு, ஜே.வி.பி.யும் ஆதரவு..? ரணில் போட்டியிடமாட்டார்..??
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கரு ஜயசூரிய போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆதரவை வழங்க உள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் எவரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவு…
2 வயது குழந்தைக்கு மாரடைப்பு – விமானம் அவசர தரையிறக்கம்
பிட்ஸ்பர்கிலிருந்து போஸ்டனுக்கு சென்ற விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெட் புளூ விமானத்தில் பயணித்த குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, விமானம் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அக்குழந்தை விரைவாக மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. மசாசூசெட்ஸ் காவல் துறையினர் குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல்களை சீர் செய்து ஆம்புலன்ஸ் விரைந்து…
பொது வேட்பாளர் விடயத்தில் பாரிய மாற்றங்கள் – சோபித்த தேரர்
எதிர்வரும் சில தினங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்க இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று 07-11-2014 இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய அமைப்பாளர் நிஷாந்த…
பொது வேட்பாளரை தேடும் சந்திரிக்கா..!
எதிர்கட்சிகள் யாவற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேட்பாளரை முன்னிறுத்தும் ஒரு பொது வேலைத்திட்டத்தை அமைப்பதில், நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய பங்கெடுத்து வருகிறார் என்று தெரியவருகிறது. ஆனால், அவர் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கட்சியகளிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கு தலைமை தாங்கும் வண.மாதுலுவாவே சோபித…
16 ஆயிரம் சட்டத்தரணிகளுக்கு விசேட எஸ்.எம்.எஸ்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 16,000 வழக்கறிஞர்களுக்கு விசேட எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் இரு கேள்விகள் தொடர்பாக திறந்த நீதிமன்றத்திற்கு முறையீடுகளை தெரிவிப்பதற்காக அவர்களின் அபிப்பிராயத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண கூறியுள்ளார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்த ஏற்பாடுகளின் கீழ் மூன்றாவது பதவிக் காலத்திற்கு போட்டியிடுவதற்கு ஏதாவது தடைகள் உள்ளனவா என்பது பற்றி உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடியுள்ளார். இந்நிலையில்…
கைத்தொழில் அபிவிருத்தி மாநாடு
ஊடகப் பிரிவு ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த கைத்தொழில் அபிவிருத்தி மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகநாயகம் லி-யோங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்குவதை படத்தில் காணலாம். (NOV 5)
அ.இ.ம.கா. கிளை பிரான்சில் உதயம்
ஏ.எச்.எம் பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – சர்வதேச ரீதியாக கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத்திட்டத்தில் 02ம் கட்ட நிகழ்வு நேற்று முன்தினம் 06ம் திகதி பிரான்ஸில் இடம்பெற்றது. ஐரோப்பிய நாடொன்றான பிரான்ஸில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட முதலாவது அ.இ.ம.கா கட்சியின் கிளை இதுவாகும். இலங்கையின் தேசிய முதுபெரும் கட்சிகளான சு.கட்சி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடான பிரான்ஸி;ல் கட்சிக் கிளை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் பெருமையை இதன் மூலம்…
கருத்துச் சுதந்திரத்தை ஒழிப்பதற்கே உயர்நீதிமன்றை நாடினார் மஹிந்த
பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், ஜனா திபதித் தேர்தலில் போட்டியிடு வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏன் உயர் நீதிமன்றத்திடம் அவசரமாக விளக்கம் கோரியுள்ளார் எனக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஏனையோரின் கருத்துச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்தச் செயல் அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதன் அவசரத்தையும் – அவசியத்தையும் தம்மால்…
ISIS களுடன் இணைய முற்பட்ட மூவர் இலங்கையில் கைது!
சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்ளும் நோக்கில் வந்த மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக…
