News
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சி அமைச்சரா?
எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியின் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறத்து அதிருப்தியடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு நெருக்கமானவர்கள் பலரும் இவரை பொது வேட்பாளராக நியமிக்க ஆதரவினை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளில் பல ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள்…
மங்கள வீட்டுக்குச் சென்ற மஹிந்த- நாமல்
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது மங்களவை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கான பேச்சாக…
யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர். சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என…
உலகின் முதல் `செல்பி’
`செல்பி’ புகைப்படம் 175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகியுள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. தொலைபேசி- கமெரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் புடகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839ஆம் ஆண்டில் முதல் ‘செல்பி’ புகைப்படத்தை எடுத்துள்ளார். இவர் தனது தந்தையின் கடையை…
மங்கள இணைந்தால் அமைச்சரவை மாற்றம்?
சிங்கபூருக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது விஜயத்தை முடித்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர், நாடு திரும்பியதன் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டாராயின் அமைச்சரவையில் இன்று அல்லது நாளை திங்கட்கிழமை மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவருகின்றது. மங்கள சமரவீர, அரசாங்கத்துடன் இணைந்துகொண்டால் அவருக்கு வெளிவிவகார அமைச்சர் அல்லது துறைமுக அமைச்சர் பதவியை வழங்க அரசாங்கம்…
வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு விஜயம் (படங்கள் இணைப்பு)
ஏ.எச்.எம். பூமுதீன் மன்னார் பொதுவைத்தியசாலைக்கு நேற்று (08/11/2014) விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இவ் வைத்தியாசலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் சிற்றூளியர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்குபற்றினார். அத்துடன் இவர்களின் தேவைகள் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்ட ரிப்கான் பதியுதீன் அவற்றினை மிக விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கினார்.
அ.இ.ம.கா. வின் பிரான்ஸ் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு (படங்கள் இணைப்பு)
ஏ.எச்.எம். பூமுதீன் ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரான்ஸ் கிளைத்தலைவராக இஸ்ஸத் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அ.இ.ம.கா வின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் முன்னிலையில் இத் தெரிவு இடம்பெற்றது. அதே நேரம் பிரான்ஸ் கிளையின் செயலாளராக ரமழானும் பொருளாளராக ஜவாமித்தும் தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவர்களாக லாஹீர், சுயீர் மற்றும் முகம்மட் ஆகியோர் தெரிவு செய்யப்ட்டனர்….
இலங்கை எப்படி ஆளப்படவேண்டும் என்பதை எந்தவொரு கட்சியாலும் நிர்ணயம் செய்ய முடியாது
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்ட இன்றைய ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டுவந்து விடமுடியாது. தேர்தல் என்பது ஒரு நாடகம்.முதலாளித்துவத்தையும் தாராளமயமாக்கலையும் நிராகரித்துவிட்டு எந்தவொரு ஆட்சியாளராலும் இன்று அரசியல் கட்சி நடத்தமுடியாது என்பதை வைத்தே இதனைப் புரிந்துகொண்டு விடமுடியும். எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் தேர்தல்கள் மூலம் கொண்டுவந்துவிடமுடியாது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி தொடங்கி சமீபத்தில் அரபுலக நாடுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் வரை அனைத்துமே ஜனநாயகத்தை…
சம்மாந்துறையில் O/L மாணவர்களுக்கான குழு முறை கணிதப் பாட விசேட பயிற்சிப் பட்டறை
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 05.11.2014 ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை IIFAS அமைப்பின் அனுசரனையிலும் 07.11.2014 ம் திகதி வெள்ளிக் கிழமை சம்மாந்துறை செப்கோ அமைப்பின் அனுசரனையிலும் குழு முறைப் பயிற்சிப் பட்டறை மொறட்டுவை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பு மாணவர்களின் பூரண வழிகாட்டல்களின் கீழ் நடாத்தப் பட்டது. இன் நிகழ்விற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த கணிதத்துறையில் பல்கலைக் கழகங்களுக்கு தேர்வான 2011,2012,2013 ம் ஆண்டு மாணவர்கள் வர…
பேர்லின் சுவர் இடிக்கப் பட்டு 25 வருட நிறைவு
1945 ஆம் ஆண்டில் 2 ஆம் உலகப் போரில் ஜேர்மனி தோல்வியுற்றதை அடுத்து 4 துண்டுகளானது. இதில் மூன்றை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை கட்டுப் படுத்தியதுடன் இவை அனைத்தும் இணைந்து பின்னர் மேற்கு ஜேர்மனி ஆனது. இந்த நாடுகளுக்கு நட்புடன் திகழாத சோவியத் யூனியன் 4 ஆவது பாகத்தை கட்டுப் படுத்தியதுடன் அப்பாகம் பின்னர் கிழக்கு ஜேர்மனி ஆனது. மேலும் இவை தமக்கிடையே பிரிக்கப் பட்ட பகுதிகளை ஆள்வதற்காக தலைநகர் பேர்லினில் மிகப் பெரிய…
வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம்
புனித பாப்பரசரர் முதலாம் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த மாத இறுதியில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாப்பரசரர் பிரான்ஸிஸ் இலங்கையில் விஜயம் செய்யவுள்ள மருத மடு தேவாலயம் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கவுள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, பாதுகாப்பு…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (08) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேலும் வடமேற்கு கடலோரப்பகுதிகள் அதிகளவில் கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் வடக்கு கடலோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் சுமார் 50 கிலோ மீற்றர்…
