News
தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் றிஷாத்
முகம்மட் ரிபாக் தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது. மாறாக அரசின், கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிசாத் பதியுதீன், கடந்த ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கு மானிய விலையில் மோட்டர் சைக்கில் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்;கிழமை இடம்பெற்ற போது…
வாகன விபத்தில் 50 பேர் பலி
பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் நகருக்கு அருகில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிரே வந்த டிரக் வண்டியொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலகவிற்கு இன்றும் பிணை மறுப்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன், அதுதொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்தார். அண்மையில் கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் ஸ்கொட்லாந்து பிரஜைகளை மாலக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தவிற்கு முடியுமா? முடியாதா? : நீதிமன்றம் கூறிய பதில் விரைவில் வெளியாகும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? பதவிப் பிரமாணம் செய்து நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு சட்ட விளக்கம் அளிக்கமாறு ஜனாதிபதி உச்ச நீதிமன்றிடம் கோரியிருந்தார். உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு இந்த சட்ட விளக்க அறிக்கையை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ள…
மோடி – மகிந்தவுடன் பேசியது உண்மையா? ஜவாஹிருல்லா
கொழும்பு நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்க தமிழக அரசு செலவு செய்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியதாகவும், 5 மீனவர்கள் விரைவில் இந்தியா திரும்ப உள்ளனர் எனவும், எந்த பொறுப்பும் இல்லாத சுப்பிரமணியசுவாமி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளதாக இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-…
மூன்றாவது தடவையும் போட்டியிட முடியுமா? உச்சநீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பிவைப்பு
18வது அரசியலமைப்பு திருத்தத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட முடியுமா? இரண்டாவது பதவிக் காலத்தில் நான்கு வருடத்தின் பின் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியுமா? போன்ற விவகாரங்கள் தொடர்பில் நேற்று உச்ச நீதிமன்றம் தமது முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது. அரசியலமைப்பின் 129 (1) சரத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டதற்கமைய பத்துப் பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் அவ்விவகாரம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளப் பட்டதற்கிணங்க அதன்…
மங்களவும் பொன்சேகாவும் சிங்கப்பூரில் பேசியது என்ன?
அஸ்ரப் ஏ சமத் சரத்பொண்சேகா மங்கள சமரவீரவுக்கு அரசில் சேரவேண்டாம் என ஆலோசனை வழங்கியதாக நேற்று அனைத்து எதிர்க்கட்சிககளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அதே வைத்தியசாலையில் மங்கள சமரவீரவும் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு நாளை நாடு திரும்புகின்றார். நாடு திரும்பியதும் அரசில் சேருவதாக மங்கள சமரவீர தெரியப்படுத்தியிருந்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையே சரத்பொன்சேகா நாடு திரும்புகின்றார். அது மட்டும் நாம் ஒன்று சேர்ந்து பேசுவோம் அவசரப்பட்டு அரசில் சேர வேண்டாம். எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்….
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்..?
மெரிக்க நாடு உருவானதிலிருந்து அது பீதிவயப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏனெனில் உலகின் பல பாகங்களிலிருந்தும் அமெரிக்காவில் புகுந்த மக்கள் ஐரோப்பியர்கள் அங்குள்ள செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களைக் கடுமையான வேலைகளுக்கு உட்படுத்தினார்கள். குறைந்த அளவே கூலி கொடுத்தார்கள். அந்த மக்களைச் சுரண்டி, சுட்டுக் கொன்று அச்சுறுத்தித்தான் அங்கே தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள். தங்கள் ஆதிக்கத்தை அங்கே நிலைநாட்டினாலும் ஒரு பெரும் பீதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். காரணம் அந்த அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் எப்போதும்…
அழைப்பினை நிராகரிக்காது, ஆழமாக கவனத்தில் எடுப்போம்
தேசிய பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதற்கு நாம் பல தடவைகள் வௌிப்படுத்திய கண்ணியமான நல்லெண்ணத்தை அரசாங்கம் முறையாக பயன்படுத்த தவறிவிட்டது எனத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தலுக்கான அறிவிப்பொன்று இன்னமும் வௌியிடப்படாத நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கருத்தை நிராகரிக்காது ஆழமான கவனத்தில் எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறு ஆதரவளிப்பதன் மூலம் அக்கட்சி அனைவரும் ஏறறுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.அந்த…
யாழ் பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா – முஸ்லிம்களும் பட்டம் பெற்றனர் (படங்கள்)
யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திங்கட்கிழமை ஆரம்பமாகியது. 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர். இவ்வமர்வுகள் திங்கட்கிழமை (10), செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களிலும் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் இப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பொது வேட்பாளருக்காக ஒன்றுபட்ட கட்சிகள் (வீடியோ இணைப்பு)
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது. அது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று 10-11-2014 இன்று பிட்டகோட்டேயில் நடைபெற்றது. நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் கலந்துகொண்டிருந்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் மற்றும் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் பலப்படுத்தல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் தொடர்பில் இவர்கள் ஊடகங்களுக்கு கருத்து…
அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)
எ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார். அத்துடன் ,தற்காலிகமாக வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட கிராம சேவகர்களுக்கும் அமைச்சர் நிரந்தர நியமன கடிதங்களையும் வழங்கி வைத்தார்.
