News
ஊவா மாகாண சபையை வெல்ல அரசு கையாண்ட உத்தியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அரசு கையாள முயற்சிக்கிறதா..?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ஊவா மாகாண சபையை அரசு வென்றெடுக்க முஸ்லிம்களின் வாக்குக்களை கிஞ்சித்தும் கணக்கெடுக்காது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையே அரசு குறிவைத்திருந்ததனை பதுளை மாவட்டத்தில் அரசு முஸ்லிம் வேட்பாளர்கள் எவரையும் களமிறக்காதது தெளிவாக சுட்டி நின்றது.முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதனை அரசும் நன்கே அறியும்.அப்படி இருக்க அரசு முஸ்லிம்களிடம் தனது நேரத்தினை வீண் விரயம் செய்யாது பெரும்பான்மை இன மக்களை குறிவைத்து தங்களது காய்களை நகர்த்துவதே அரசின் வெற்றி வாய்ப்புக்களை உறுதிப்படுத்தப் போகிறது….
சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம்
சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விசனம் தெரிவித்துள்ளன. சர்வதேச மீட்புக் குழு மற்றும் நோர்வேயின் அகதிகள் கவுன்சில் ஆகிய இவ்விரு நிறுவனங்களும் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சிரியப் போரில் அகதிகளாகி வரும் மக்கள் தமது நம்பிக்கையை முற்றாக இழந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமது இந்த அகதிகளை அனுமதிப்பது…
உலக வர்த்தக மையத்தின் 69-வது மாடியில் தொங்கிய ஊழியர்கள்: 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்பு
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் வெளிப்புறத்தை சுத்தம் செய்த ஊழியர்கள் இருவர் சாரம் அறுந்து 69-வது மாடியில் தொங்கினர். மீட்பு பணி தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட நிலையில் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001- ஆம் ஆண்டில் செப்டம்பர் 11-ந் தேதி அல்-காய்தா பயங்கரவாத தாக்குதலால் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2,996 கொல்லப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில்…
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு இடங்களில் ஆரம்பித்துவைப்பார். வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென, ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல், ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான ஆரம்ப நிகழ்வு ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும். ‘செங்கட தொரட்டுவ’ என்னும் கண்டி அதிவேகப்…
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு?
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை நிராகரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதி வழங்கினார். அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணையை நடத்த முடியாது என்றாலும், அவர் நிதியமைச்சராகவும் செயற்படுவதால், நிதியமைச்சர் என்ற வகையில் அவரையும் வழக்கில் சேர்க்க முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார்….
நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம்
ஹாசிப் யாஸீன் நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சு இன்று உலக நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீரிழிவு நோய் பரிசோதனை விசேட கிசிச்சை முகாம் இன்று வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின் தலைமையில் இடம்பெற்றன. இப்பரிசோதனை முகாமில் காரைதீவு சண்முகா வித்தியாலய ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நீரழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிதோனை என்பன மேற்கொள்ளப்பட்டதுடன்…
மன்னார் – வங்காலை பிரதேசத்தில் தாகம் தீக்கும் அமைச்சர் (photos)
ஏ.எச்.எம் .பூமுதீன் மன்னார் வங்காலை பிரதேசத்தில்; தாகம் தீக்கும் இடத்தில் உள்ள நீர் அதிக உப்பு தன்மை கொண்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தானாக ஊற்றெடுக்கும் ஒரு தண்ணீர் ஊற்று எது வித உப்புத் தன்மையும் இல்லாமல் மக்களின் குடிநீர் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது நீண்டகாலமக ஊற்றெடுத்து வரும் இந்த நீரை பரிகி பார்க்க வேண்டும் என்பது அமைச்சரின் நீண்டநாள் ஆசை. நாணாட்டான் பிரதேச நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்று திரும்பி வரும் வழியில்…
தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் திறந்து வைப்பு
தாய் சேய் சுகாதார வைத்திய நிலையங்கள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனினால் நேற்று (13) திறந்துவைக்கப்பட்டன. தலைமைன்னார்,தாறாபுரம்,சொர்னபுரி, பெரியமடு ஆகிய பிரதேசங்களிலேயே இந்நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் டெணீஸ்வரன் ,அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதை படத்தில் காணலாம்
பேலியகொட சந்தியில் துப்பாக்கிச் சூடு
பேலியகொட – நுகேவீதி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசை பாதுகாப்பதற்கு ஆதாரங்களை மறைத்தது ஐ.நா.
இலங்கை அரசை குற்றச்சாட்டு களிருந்து காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஆதாரங்களை மறைத் தது என இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. யுத்தக் குற்ற ஆவணங்கள் குறித்து ஐ.நாவில் இடம்பெற்ற கலந்துரையாட லின்போதே இந்தக் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த கலந்து ரையாடலின்போது கருத்துத் தெரி வித்த இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், மத்யூ லீ இலங்கையில் 2009 இல் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து உடனுக்குடன் கிடைத்த உயிரிழப் புகள் குறித்த புள்ளிவிவரங்களை ஐ.நா….
உயர்நீதிமன்ற விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை – ஜே.வி.பி.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட வியாக்கியானத்தை ஏற்க முடியாதென திட்டவட்டமாக நேற்று அறிவித்தது ஜே.வி.பி. அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த முன்னெடுக் கும் நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் ஓரங்கமாக எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை தமது கட்சி நடத்தும் என்றும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை…
ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி கூட்டங்களும் பேரணிகளும் ஆரம்பம்
2015 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை குறி வைத்து அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் கொழும்பில் நேற்று இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. இதன்படி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரி ஜாதிக யஹல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் அரசுக்கு எதி ராகவும், ஜனாதி பதியின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அரசுக்கு ஆதரவாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், கொழும்பு அரசியல் களம் நேற்று மாலை…
