Headlines

ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? – சட்டத்தரணிகள் கேள்வி

“ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது?” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது. எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல்…

Read More

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்!- விக்கிரமபாகு

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற  இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு கருணாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி தவிர்க்க முடியாதது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யினர் கூட்டிணைந்து ஒரு வேட்பாளரை தேர்தலில் களமிறக்குவார்கள். அதன் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாகவுள்ள இனவாத அடிப்படையிலான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளுக்கு…

Read More

பொதுவேட்பாளராக போட்டியிட அர்ஜூன ரணதுங்க தயார்!

ஏற்கனவே மாதுலுவாவே சோபித தேரரின் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் தாம் எப்போதும் நாட்டுக்கு முன்னுரிமை வழங்குவதன் காரணமாக எந்தக் கட்சியும் பொதுமக்களும் விரும்பினால் பொதுவேட்பாளராக போட்டியிடத் தயார் என்று அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தநிலைக்கு தகுதியானவன் என்று கருதினால் தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் ரணதுங்க தெரிவித்துள்ளார். தாம்  ஒருபோதும் பதவிக்காக பணியாற்றியதில்லை. நாட்டை பாதுகாக்கும் விடயங்களையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருந்தாலும் தற்போது…

Read More

இலங்கையில் இந்தியாவின் பாரிய ஹோட்டல் முதலீடு ஆரம்பம்!

காலிமுகத்திடலில் ஐரிசி என்ற இந்த ஹோட்டல் மற்றும் குடியிருப்பு தொகுதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் ஐரிசியின் தலைவர் வை.சி. தேவசேகர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதுவே குறித்த ஹோட்டல் இந்தியாவுக்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது ஹோட்டல் திட்டமாகவுள்ளது. ஏற்கனவே ஐரிசிக்கு இந்தியாவின் பல இடங்களிலும் 100 ஹோட்டல்கள் செயற்பட்டு வருகின்றன. ஐரிசியின் வருடாந்த வருமானம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி வாலிபர் சிரியாவுக்கு தப்பியோட்டம்

ஐ.எஸ். படையில் சேர உலகின் பல நாடுகளில் இருந்து வெளியேறும் வாலிபர்கள் சிரியா அல்லது ஈராக்குக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகையில், இங்கிலாந்தில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் சிரியா மற்றும் ஈராக்குக்கு சென்று ஐ.எஸ் படையில் சேர்ந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சித்தார்த் தார்(31) என்பவர் சமீபத்தில் முஸ்லீமாக மதம் மாறினார். பின்னர், அபு ருமய்ஸா என தனது…

Read More

கட்டாரில் அப்துல் பாசித் புகாரியின் இஸ்லாமிய மாநாடு: பெருமளவிலானோர் பங்கேற்பு

கட்டாரில் இருந்து பழுலுல்லாஹ் பஹ்ஜான் அப்பாஸி கட்டாரில் இயங்கும் SLDC ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யார் அந்த குரபாக்கள்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு நேற்று (14) வெள்ளிக்கிழமை கட்டார் (அல் பனார்) அப்துல்லாஹ் பின் ஸைத் மாநாட்டு மண்டபத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச மெங்கும் இஸ்லாத்தை ஏந்திச் செல்லும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளர் அஷ்ஷெய்க்…

Read More

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடலிலும் அமைதி இருக்கவில்லை: ஏ.சி. பைஸர்கான்

வாழைச்சேனை நிருபர் யுத்தம் இடம்பெற்றபோது கடலிலும் அமைதி இருக்கவில்லை என முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஏ.சி. பைஸர்கான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட மீனவர்களில் 10 குடும்பங்களுக்கு சுமார் 37,500 ரூபாய் பெறுமதியான 10 தோணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை மாலை பிரதேச செயலாளர் எம்.எம். நவ்பல் தலைமையில் இடம்பெற்றது. முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையம்…

Read More

சோபித தேரர் வைத்தியசாலையில்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என கூறிவரும் நாகவிகரை விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் திடீர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று  அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. -Thinakkural-

Read More

செயல் வீரமிக்க செயலாளரை நாடு இன்று இழந்துவிட்டது – அமைச்சர் ரிசாத் அனுதாபம்

A.H.M.BOOMUDEEN வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீனின் மறைவு இலங்கை நிர்;வாக சேவையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது வருமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஹால்தீனின் மறைவுச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் துயரும் உற்றேன். நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஹால்தீன் முதல் முதலாக செயலாளராக பதவியேற்று , கடமையாற்றியது நான் முன்னர்…

Read More

ஹமாஸின் ஸ்தாபக தலைவர், முஹம்மது தாஹா வபாத்தானார்

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த ஹமாஸின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான முஹம்மது தாஹா மரணமடைந்தார்.77 வயதான இவர் மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வந்தார்.1987-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷேக் அஹ்மத் யாஸீன், அப்துல் அஸீஸ் ரன்தீஸி, மஹ்மூத் ஸஹார், இப்ராஹீம் யாஸுரி, முஹம்மது ஸம்அ, அப்துல் ஃபத்தாஹ் துகான், ஈஸா நஸ்ஸார், ஸலாஹ் ஷஹாதா, முஹம்மது தைஃபி ஆகியோருடன் ஹமாஸின் உருவாக்கத்தில் தலைமைத்துவரீதியாக முக்கிய பங்கினை முஹம்மது தாஹா வகித்திருந்தார். ஃபலஸ்தீனின் மத்தியில் உள்ள இப்னா கிராமத்தில்…

Read More

பாகிஸ்தானில் மலாலா எதிர்ப்பு தினம்..!

இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலா யூசுஃப் ஸாய்க்கு எதிராக தனியார் கல்வி நிறுவனங்கள்,’ஐ ஆம் நாட் மலாலா’ என்ற தினத்தை கடைப்பிடித்தன. மலாலாவின் ‘ஐ ஆம் மலாலா’ என்று நூலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஃபெடரசன் தலைவர் மிர்ஸ் காஷிஃப் அலி கூறியது:இந்நூலில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் உள்ளன.இஸ்லாத்திற்கு போதிய கண்ணியம் அளிக்கப்படவில்லை.சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி புனிதராக சித்தரிக்கப்படுகிறார்.நூலில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களை கருத்து சுதந்திரம் என்று…

Read More

இது தந்தையின் தாலாட்டு..! (video)

அமெரிக்காவில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை இறந்தது. அது இறக்கும் தருவாயில் அதற்கு தந்தை பாடிய பாடல் அடங்கிய வீடியோ பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24…

Read More