News
ஆட்சியில் குறைப்பாடுகள் இருந்தாலும் மஹிந்தவுக்கே ஆதரவு; திஸ்ஸ விதாரண அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு லங்கா சம சமாஜ கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஏற்று கொள்கின்றோம். எனினும் நாட்டை முன்னேற்ற பாதையில் இந்த அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது. நாட்டில் ஊழல் மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. செலவந்நத தரப்புக்களுடன் இணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஊழல் மிகுந்த நிலைமை உருவாக சாத்தியம் உள்ளது….
ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல்
செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந் நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாகவே அவர் மீதான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐ.நா.விசாரணையாம்; இலங்கை அதிருப்தி
இலங்கை மீது ஒழுங்கு முறையற்ற விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்வதாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவானது உத்தியோகபூர்வமற்ற முறையில் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக வெளி உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளரிடம் தமது எதிர்ப்பை வெளியிட்டார். இணையத் தளத்தில் காலக்கெடு அக்டோபர் 30 எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர்…
நிறைவேற்று அதிகாரத்தினை ஜனாதிபதியினால் நீக்க முடியாது: நிமல் சிறிபால டி சில்வா
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதியினால் நீக்க முடியாது. அந்த அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றிற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோருவோர் அதனை பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்வைக்க வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
சட்டம் தெரியாதெனக் கூறி மன்னிப்பைப் பெற முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
பழுலுல்லாஹ் பர்ஹான் சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படுத்த முடியாது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார். சர்வதேச உளவியல்சார்…
புலமைப் பரிசில் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகள் வெளியாகின
ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நேற்று (17) வெளியிடப்பட்டது. இதற்கமைய, கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப்புள்ளியாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு 150 வெட்டுப்புள்ளியாகவும் அமைந்துள்ளது. இதனைத்தவிர, மன்னார், முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு 149 வெட்டுப்புள்ளியாக காணப்படுகின்றது. -News1st-
நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் கோட்டாவுடன் – றிஷாத் பேச்சு
மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட நகுலேஸ்வரணின் கொலையின் பின்புலத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் – பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளருடன் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இதுதொடர்பாக உரையாடியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மன்னார் – வெள்ளாங்குளம் – கணேஷபுரம் என்ற பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின்…
விமான நிலைய போராட்டத்தால் 10 கோடி ரூபா நஷ்டம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தால் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தாலேயே இவ்வாறு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 10, 000 ரூபாய் கொடுப்பனவு, வைத்திய காப்புறுதி, 4 சதவீதம் அனர்த்த கடன், பியா புத்து மன்றத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு. பாதுகாப்பு பிரதானி தொடர்பில் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே…
அரசிலிருந்து வெளியேறுகிறது ஜாதிக ஹெல உறுமய
அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது. நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள்ளே நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் கட்சியிலிருந்து வெளியேறுமாறு வாக்களித்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இனவாதமே அரசாங்கத்தின் ஆயுதம்; ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு
அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது….
மஹிந்தவுக்கு பசில் என்றால் ரணிலுக்கு விராஜ்
ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சார முகாமையாளராக தமது இளைய சகோதரர் விராஜ் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார். எனினும் பொதுவேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது கரு ஜெயசூரியவா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றபோதும் விராஜ் விக்கிரமசிங்க இந்த நிலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராஜ் விக்கிரமசிங்க, டிஎன்எல் தொலைக்காட்சி சேவையின் நிறைவேற்று அதிகாரியாவார்.
பொதுவேட்பாளர் நிலைப்பாடு! ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரும்!- அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள்
இதன் மூலம் இலங்கையில் புதிய சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. விமல் வீரக்கொடி, சியாமொன் ஜெயசிங்க உட்பட்ட பல இலங்கையர்கள் இந்த அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்கள் விடுத்துள்ள குறிப்பு ஒன்றில், நாடு இன்று இராணுவமயப்பட்டு சிவில் நிர்வாகம் அற்ற நிலையில் உள்ளது அரச நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்து போயுள்ளது. இதற்கு இலங்கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே காரணமாக இருந்திருக்கிறது என்றும் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
