News
கூடவிருந்து கொல்லும் நீரிழிவு நோய்
டாக்டர். ILM. றிபாஸ் MBBS, MSc, MD (Reading at PGIM Colombo): நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விளிப்புனர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு வியாதிக்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இவ்வியாதியினை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு…
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று பிற்பகல்
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு, இன்று வியாழக்கிழமை (20) பிற்பகலில் உள்ள நல்ல நேரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நேற்று இரவு இடம்பெற்ற போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவே போட்டியிடுவதற்கான கட்சியின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு ஆதரவில்லை சனி மாற்றமும் நல்லதுக்கில்லை
ஜனாதிபதித் தேர்தலில் அரச தரப்புக்கு ஆதரவ ளிக்கப்போவதில்லை என்றும், மஹிந்த ராஜபக்வின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் கூறினார். தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசுக்கு தெளிவானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதி பதி முறைமையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்….
பூனைக்கு மணி கட்டிவிட்டோம் எலிகள் விழிப்பாக இருந்தால் சரி
“பூனையிடம் இருந்து தப்பிப்பதற்கு அதன் கழுத்தில் மணிகட்டுவதே சிறந்த வழியயன எலிகள் முடிவெடுத்தன. இதன்படி, மணியைக் கட்டுவதற்கு அவை தயாராகின. இந்த திட்டத்துக்கு அமைய ஒரு எலி பூனையில் கழுத்தில் மணி கட்டியது. ஆனால், பூனை ” மீயா’ என்றதும் ஏனைய எலிகள் ஓடிவிட்டன. இந்நிலைமையே இன்று ஹெல உறுமயவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், நாம் பின்வாங்கமாட்டோம். கொள்கைத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக போராடுவோம். வெளியில் இருந்தாவது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு தெரிவித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிப்…
இனி எம்மை கொலைகாரர் என்பார்கள்; எதற்கும் தயங்கோம்
ஹெல உறுமய உறுப்பினர்களுக்கு எதிராக இனி பல கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படலாம். கொலைகாரர்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும்கூட குறிப்பிடலாம். ஆனால், நாம் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டோம்.பிரபாகரனுக்கே அடி பணியாத நாம் இவ்வாறான அழுத்தங்களைக்கண்டு அஞ்சப்போவதில்லை . சிங்கள மக்களுக்காக நாம்தான் குரல் எழுப்பிவரு கின்றோம். மாவிலாறு முதல் அளுத்கமவரை எமது குரல் ஓங்கி ஒலித்தது. இன்று இந்த அரசிலுள்ள சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் சிலர் தான்தோன்றித்தனமாகச் செயற் படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை…
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளியாகிறது
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை ஒழுங்குப்படுத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். உயர் தரப் பரீட்சையில் 2,34,197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62,134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவசரமாகக் கூடும் அமைச்சரவை!
ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக்…
உதய கமன்பிலவின் டுவிட்…….!
ஹெல உறுமயவின் மேல்மாகாண சபை உறுப்பினர் உதயகமன்பில தனது ராஜினாமா கடிதத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். தனது ராஜினாமாவை ஊடகங்களுக்கு அறிவித்த கமன்பில அக் கடிதத்தை டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.ன்றமை குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளருக்கு ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர் – சரத் பொன்சேகா
பொது வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியானவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க அனுபவ முதிர்ச்சியுடையவர். ரணில், அனுபவமும் திறமையும் உடையவர். ரணில் பொருத்தமற்றவர் என சிலர் குறிப்பிடுகின்ற போதிலும், என்னை பொறுத்தவரையில் ரணில் போட்டியிடுவதில் பிரச்சினையில்லை. பொது வேட்பாளர் அனுபவமும், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர்…
உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியாத நிலையில் தமிழினம்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீபச்சுடரினைக்கூட ஏற்ற முடியாத நிலையில்தான் எம்மினம் இந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் ஜனாதிபதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வடகிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களூடாக ஆலயங்களில் பூசை செய்யுமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டு, அவரது பிறந்தநாளான இன்று ஆலயங்களில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளது. இவரது பிறந்தநாளன்று கட்டாயமாக ஆலயங்களில் விளக்கேற்றுமாறு கட்டளையிடும் அரசாங்கம் இந்த நாட்டிலே போரில் உயிரிழந்த 145,000…
இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதோடு பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தியான பின் மக்கள் கருத்தரிய ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் ஏற்பாடுகள் உள்ளன. 2005 நவம்பர் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ முதல் முறையாக இலங்கையின்…
இலங்கை அகதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி
திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த நிலையில் நேற்று 20 பேர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு…
