Headlines

கனடா -இலங்கை வர்த்தக உறவுகள் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் – கனடா உயர் ஸ்தானிகர்

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் நெருக்கமாக பலப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஷேர்லி வைற் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடந்த வாரம் முன்னோடியான ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ‘கனடாவுக்கான ஏற்றுமதி’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற அமர்வொன்றின் போதே இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை கனடா-இலங்கை இடையேயான இருதரப்பு வர்த்தக கடந்த சில ஆண்டுகளாக…

Read More

மகிந்த ஆத்திரம் – சிறிசேனவின் பதவிகள் பறிப்பு

எதிர்வரும் ஜானதிபதி   தேத்தலில் மகிந்தவுக்கு எதிராக களமிறக்கப் பட்டிருக்கும் அமைச்சர் மைத்ரியின், அமைச்சர் பதவி மற்றும் சுதந்திர கட்சியின் செயலாளர் எனும் பதவியும் பறிப்பதற்கான கடிதம் தயார் செய்யப்பட்டுள்ளதென ACMC.LK இணையதளத்திற்கு  நம்பகரமானதொரு தகவல் கிடைத்துள்ளது

Read More

நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்: மைத்திரி

ஐந்து வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். எதிர்காலத்தில் நான் நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு அமைச்சர் தற்போது உரையாற்றி கொண்டிருக்கின்றார். அதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுவே, எனது இறுதி வைபவமாக கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மைத்திரியின் விக்கிபீடியா தகவல் ‘திருத்தம்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேனவின் தகவல்கள் அடங்கிய விக்கிபீடியாவில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் என்று திருத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை 5.10க்கே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திருத்தம் 5.20க்கே மீண்டும் திருத்தப்பட்டு, “2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன” என்ற வசனம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மைத்திரிபால – ஜனாதிபதி அவசர சந்திப்பு?

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read More

உலக தொலைக் காட்சி தினம் இன்று

உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் தொடர்பில் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது. உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின்…

Read More

வடக்கு மக்களின் வாக்கு மகிந்தவுக்கு கிடைக்குமாம் -குமார வெல்கம கண்டுபிடிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். யாழ்.தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக வடபகுதிக்குச் சென்ற ஜனாதிபதியை மக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றிருந்தனர். இதனூடாக வடக்கில் ஜனாதிபதிக்கு உள்ள ஆதரவு வெளியாகியுள்ளது. யுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டமையால் வடக்கிலுள்ள புதிய சந்ததியினர் ரயிலைக் கூட காணாமல் இருந்தனர். ஜனாதிபதியின் முயற்சியால் அவர்கள் தற்பொழுது ரயில் சேவையை மீண்டும் பயன்படுத்தக்…

Read More

6 பேரைக் கடித்த நாய்க்கு விசர்

தெல்லிப்பழை சந்தி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டாக்காலி நாய் ஒன்று 6 பேரைக் கடித்து காயப்படுத்தியது. இதனையடுத்து குறித்த 6 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களை கடித்த அந்த நாய் இறந்துள்ளது. இதனால் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் நாயின் தலையை வெட்டி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாய்க்கு விலங்கு விசர்நோய் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது…

Read More

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சியில் மகிந்த அரசு?

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர். மேலும் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அமைச்சர் மைத்திரிபாலவும் உத்தரவாதமொன்றை நேற்று வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது பெயரை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றிரவு அலரிமாளிகையிலிருந்து சில விசேட…

Read More

ஞானசாரரின் நாடகம் தோல்வியில் முடிந்துள்ளது – ஆசாத் சாலி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வர வேண்டுமென ஞானசாரர் தேரர் ஆசைப்பட்டது மஹிந்த ராஜபக்ஸவின் விருப்பத்திற்கு அமையவே என ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி தோல்வியடையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நம்பினார். எனவே தோல்வியடையும் வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்த ஞானசாரர் முயன்றார். ஆகவேதான் ரணிலுக்கு ஆதரவாக ஞானசாரர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். இருந்தபோதும் நாம் சகல திட்டங்களையும் முறியடித்து…

Read More

மைத்திரிபால சிறிசேன குறித்து முஸ்லிம் காங்கிரஸிடம் கவலை வெளியிட்ட பசில்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 20-11-2014 அன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸினரைப் பார்த்து கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ஸ, பாருங்களேள் எங்கட செயலாளர் (மைத்திரிபால சிறிசேன) பிரச்சினை படுத்துகிறார் என தனது கவலையை வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

Read More

இலங்கை அரசியலில் அடுத்து வருகின்ற 48 மணித்தியாலங்கள் சுடு பறக்கும்..!

நஜீப் பின் கபூர் இலங்கையில் அடுத்து வருகின்ற 48 மணித்தியாலங்களும் அணல் பறக்கின்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் என்பதனை நமது வாசகர்களுக்கு முன்கூட்டி அறியத் தருகின்றோம்.  செய்திகளை உடனுக்குடன் முடிந்தளவு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். எமக்குக் கிடைத்த மிகப் பிந்திய தகவலின்படி சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவை ரணில்  விக்ரமசிங்ஹ பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அதற்கான உறுதி மொழி இந்த ஏற்பாட்டின்  முக்கிய பாத்திரமாக செயலாற்றுகின்ற  மாதுவாவே சோபித தேரருக்கு ரணிலினால்…

Read More