News
பொதுபல சேனாவை போட்டுத்தாக்கும் மைத்திரியும், ஹெல உறுமயவும்..!
அஷ்ரப் சமத் பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை இன்று ஊடகங்களுக்கு அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது பலசேனாவை பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவ்வமைப்பை பேச அழைத்ததாகவும் அந்த அழைப்பை பொதுபல சேனா அமைப்பு நிராகரித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன . இது தொடர்பாக மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளது. இந்த நாட்டில்…
ஹூனைஸ் பாறுக் எம்பிக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஏ.எச்.எம்.பூமுதீன் சமுகத்திற்காகவும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காகவுமே கட்சி மாறியதாக ஹூனைஸ் எம்பி தெரிவிக்கும் காரணம் முழுப்பூசனி;க்காயை சோற்றுக்குள் மறைப்பதற்கு ஒப்பானதாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிஸின் செயலாளர் நாயகம் வை.எல் .எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார். அ.இ.ம.கா உயர்பீட கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் அங்கு கருத்துக்கள் எதையும் தெரிவிக்காமலும் தான் தோன்றித் தனமாக கட்சி மாறிவிட்டு மேற்படி காரணத்தை ஒப்புவிப்பது அவரது சுயநலத்தை தெளிவாக எடுத்துக்காட்ட போதுமானது என்றும் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார். ஹூனைஸ் பாறுக்…
கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய கப்பல்
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை கடந்த 24ஆம் திகதி வந்தடைந்துள்ளதாகவும் அது எதிர்வரும் 28ஆம் திகதிவரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த ரஷ்ய கப்பலுக்கு கடற்படை மரபுக்கிணங்க இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
புறா சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி exclusive
இதனை மைத்திரிபால சிறிசேன உறுதி செய்துள்ளார். இதன்படி அவர் புறா சின்னத்தில் போட்டியிடுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மங்கள சமரவீர இந்த கட்சியை பதிவு செய்தார். இந்தநிலையில் ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளர் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுவேட்பாளர் மற்றும் சின்னம் என்பதை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். கட்சியின் தனித்துவம் எந்தநேரத்திலும்…
அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!
இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார். பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன்…
4000 சட்டத்தரணிகள் மைத்திரியை ஆதரிக்க முடிவு
4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கிய லோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சார கூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின்…
ஜனாதிபதியால் இனி தூங்க முடியாது – ராஜித
தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தின் மொத்த பற்களையும் ஒன்றாக கழற்றாது ஒன்றொன்றாக கழற்றி எடுப்போம். மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம் எனவும் குறிப்பிட்டார். பொது எதிரணியினர் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண மாவட்ட உறுப்பினர்களை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்;…
மக்களால் உருவான தேசியத் தலைவன் – 42 இற்குள் 15 வருடம்
ஆக்கம் எஸ்.எச்.எம்.முஜாஹிர் – புதுக்குடியிருப்பு குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை. உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும்-அழித்தொழிக்க வேண்டும் என்ற தூர நோக்குடைய சர்வதேச சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் உலகம் பூராகவும் இன்று…
தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசு மீண்டும் அழைப்பு
“அதிகார பரவலாக்கலுக்கு அரசு தயாராகவே இருக்கிறது. இதுகுறித்து பேச்சு நடத்த தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஐக்கியத் தேசியக் கட்சி, தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய எதிர்கட்சிகளுக்கு பல முறை அழைப்பும் விடுக்கப்பட்டது. எனினும், இவர்களோ தெரிவுக் குழுவுக்கு வருகைத் தராது தற்போது நிறைவேற்று அதிகாரமுறை அழிப்புக் கோத்தை கையில் எடுத்து அரசியல் நடத்தி வருகின்றனர்” இவ்வாறு அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரால் நேற்று முற்பகல் நடத்தப்பட்ட செய்தியா…
விஞ்ஞானி டென்ஹாம் மரணம்
வயது முதிர்வுக்கான அடிப்படை தத்துவங்களை கண்டுபிடித்த பிரபல மருத்துவ விஞ்ஞானி டென்ஹாம் ஹார்மன் தனது 98ஆவது வயதில் காலமானார். அவரது தத்துவங்களை அடிப்படையாக வைத்தே புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதர நோய்கள் குறித்த பாடங்களும், ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. தனது 90ஆவது வயதுகளில் நெப்ராஸ்கா மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஹார்மன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்ததாக அம்மருத்துவ மைய செய்தி தொடர்பாளரான டாம் ஓ’கான்னர் தெரிவித்தார். ஹார்மனின் ஆய்வுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு, வயது…
தேர்தல் கண்காணிப்புப் பணிக்காக 4 சர்வதேச அமைப்புகள் களத்தில்
2015 ஜனவரி 8 இல் நடைபெறவுள்ள ஜனாதி பதித் தேர்தலைக் கண்கா ணிப்பதற்கு 4 சர்வதேச கண் காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளன என்றும், இதில் பங் கேற்பதற்கு ஐ.நாவின் தேர்தல் கண்காணிப்புப் பிரி வுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித் தார். இராஜகிரியவிலுள்ள தேர்தல் கள் செயலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும்…
மைத்திரிபால வாக்குறுதியை நிறைவேற்றுவார்! ஆனால் மகிந்தவுக்கே ஆதரவு: வாசுதேவ
ஜனாதிபதி தேர்தலில் சிலவேளை அவர் வெற்றிபெற்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மிகவும் மகிழ்ச்சியடைய போவது தானே எனவும் அவர் கூறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜே.வி.பி போன்ற வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால், தானும் அதற்கு ஆதரவு வழங்கியிருக்க முடியும் எனவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அவர் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதால், எந்த வகையிலும் தனது கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைக்காது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று…
