Headlines

வடக்கு முஸ்லிம்களுக்கான கையெழுத்து வேட்டை ; நாளை வெள்ளிக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுப்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ளது. நாடுபூராகவும் உள்ள ஜூம்ஆ பள்ளவாசல்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையெழுத்து வேட்டையை ஐந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம், உடனடித் தீர்வுக்கான குழு, அல்ஜாஸீம் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வடமாகாண  உலமா சபை ஆகியனவே அந்த 05…

Read More

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது – தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த  பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான  வட்டாரங்கள் தெரிவித்தன. நாயினதீவு பிரதேசத்தைச்  …

Read More

சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : யாழில் பதற்றம்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்  யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிய  வேளையில் நள்ளிரவு…

Read More

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் – றிஷாத் பதியுதீன்

ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் கிராமத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்த…

Read More

நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை

வித்தியாவின்  படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி  பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன்  அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும்  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்…

Read More

மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுக்க கையெழுத்து வேட்டைக்கு துணைபுரிய வேண்டுகோள்….!

ரஸீன் ரஸ்மின் வுன்னி முஸ்லிம்களின கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும், மன்னார் மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுப்பதற்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை துணையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையில் வாழும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது ஒப்பங்களையும் இட்டு அந்த மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் யுத்த…

Read More

(படங்கள்)இன்று மரிச்சுக்கட்டியில் ஆரம்பமானது கையெழுத்து வேட்டை….!

– மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் வேலைத்திட்டத்தை கண்டித்தும்,,தமது தாயக பூமியில் இறுதி மூச்சு வரை தாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கோறி  2 இலட்சம் மக்களின் கையொப்பத்தை பெறும் வேட்டை இன்று  ஞாயிற்றுக்கிழமை இப்பிரதேச மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  மறிச்சுக்கட்டி மொஹதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கையொப்பம்…

Read More

RRT சார்பாக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்….

வில்பத்தை அண்டிய பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கையொப்ப வேட்டை ஒன்று ஆரம்பமாகிறது. மரிசிக்கட்டியில் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் உடைந்து, தூர்ந்து போய்க் கிடக்கும்பள்ளிவாசலுக்கு அருகில் இந்த கையொப்ப வேட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. சுமார் 2 இலட்சம் முஸ்லிம்களின் கையொப்பங்களைத் திரட்டும் இன்றைய முதல் நாள் வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டு நாட்டிலுள்ள 2,000 பள்ளிவாசல்கள் ஊடாக…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா

ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார், விடத்தல்தீவு சுஐப் எம். காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையுடன் நேற்று மாலை (06) கொழும்பு-10, தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீனும், விடே அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூதும் சிறப்பு அதிதிகளாக…

Read More

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்  மற்றும்  சகோதரனை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன்  தனது அனுதாபங்களையும்  தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும்  அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள்  தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி  வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன்  வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின்  மாணவர்கள்  மற்றும்  ஆசிரியர்களை சந்தித்து…

Read More

வித்தியாவின் படுகொலைக்கு விஷேட நீதிமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ் சென்றுள்ள ஜனாதிபதி, புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவியின் படுகொலை தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று உரிய தீர்ப்பு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வித்தியாவின் படுகொலையுடன்…

Read More

சுகைப் .எம். காசீம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்”

– அஸ்ரப் ஏ சமத் – நூல் வெளியீட்டு விழா ஜூன் 6 கொழும்பில் தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ஷவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை (06.06.2015) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த…

Read More