Main News
காக்காதீவு குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா!
கொழும்பு 15 காக்கா தீவு பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மட் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், மத்ரஸா நிருவாகத்தினர், ஆலிம்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும். பங்கேற்றிருந்தனர். (ன)
விருதோடை கிராமசேவகர் காரியாலயத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் நிதியுதவி!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் வியாழக்கிழமை அன்று விருதோடை கிராம சேவகர் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார். அதன்போது அங்குள்ள அலுவலகம் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், மக்கள் பாவனைகளின் போது அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகமாகக்கொண்டதாகவும் காணப்பட்டது. இதனை அவதானித்து உடனே கிராம சேவகருடன் கலந்துரையாடி, தனது சொந்த நிதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அக்குறைபாடுகளை மக்களின் நலன் கருதி நிவர்த்தி செய்து கொடுத்தார். அத்தோடு “எதிர்வரும் நாட்களில் புதிய கிராம சேவகர்…
முஸ்லிம்களின் நில கபளீகரப் படலம் நல்லாட்சியிலும் தீவிரமா? ? ?
புத்தளம் உப்பளங்களை அரசு அபகரிப்பதை அ.இ.ம.காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கின்றது. இந்த நில அபகரிப்பையெதிர்து 31/07/2028 ல் புத்தளத்தில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தை ஆதரிக்கின்றோம். உரிமைகள் சாய்ந்தால் உடமைகள் மாயும். உரிமைக்குக் குரல் கொடுப்போம் வறுமைக்கு விடை கொடுப்போம். ” நிலம் ” என்பது மனித வாழ்வின் உயிரோடும் உரிமையோடும் பின்னிப் பிணைந்துள்ளது. “நில” உரிமைப் போராட்டமே உலகின் போராட்டம் களுக்குக் காரணமாயுள்ளது. ” நிலம் ” என்பது உங்களுடைய மூதாதையரால் உங்களுக்கு வழங்கப்பட்டதல்ல ; மாறாக…
மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்துக்கான மத்திய குழுத் தெரிவு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான மத்திய குழு தெரிவு அறிவித்தல் வழங்கப்பட்டதன் படி கடந்த வெள்ளிக்கிழமை (03-08-2018) பி.ப 7.00 மணியளவில் மஃரிப் தொழுகையை தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அக்கரைப்பற்று பட்டின பள்ளி வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்11ம் வட்டார செயற்பாட்டுக் காரியாலயத்தில் அதன் முதற்செயற்பாட்டு நிகழ்வாக இடம் பெற்றது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் வட்டாரத்திற்கான 2018 நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இங்கு…
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாவணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்று, தத்தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை திங்கள் கிழமை (06 ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில்…
“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விஷேட கவனஞ்செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள “லூர்து நகர்” வீடமைப்புத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (05) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அமைச்சர் சஜித் பிரேமதாச…
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சரின் வாழ்த்துச் செய்தி!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாளை ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாளை நடைபெறும் தரம் ஐந்து புலமைப் பரிசில்…
“சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது” பொலன்னறுவையில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு!
“புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்கடன் மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொலன்னறுவை, தம்பாளை, ஹிலால்புரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று மாலை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, நினைவுக் கல்லுக்கான திரையையும் திரை நீக்கம் செய்து வைத்தார். பிரதியமைச்சர் காதர்…
அனுராதபுரம், நெலுபாவ பிரதேச மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!
நீண்டகாலமாக சுத்தமான குடி நீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் அனுராதபுரம் நாச்சாதுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெலுபாவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான தாரிக் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
“தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வது சமூகத்தை நேரடியாகப் பாதிக்கின்றது” பொலன்னறுவை, கலெல்லயில் அமைச்சர் ரிஷாட்!
பாடசாலைகளின் வளங்களையும், கட்டிடங்களையும் பெருக்குவதில் நாம் அக்கறை காட்டும் அதேவேளை, மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தி உரிய அடைவு மட்டத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிளிநொச்சி மற்றும் வன்னி மாவாட்டங்களில் மாணவர்கள் ஓலைக் கொட்டில்களிலும், அகதி முகாம்களிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்த போதும், அவர்கள் கல்வியிலே முன்னேற்றமடைந்து வருவதற்கு கல்வி மீது கொண்ட ஆர்வமும், ஊக்கமுமே காரணமாகும் என்று அவர் மேலும்…
பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு தொடர்பான கலந்துரையாடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், குருநாகல் மாவட்டத்தின், தம்பதெனிய தேர்தல் தொகுதியில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி சம்பந்தமான கலந்துரையாடல், கிரி/பொல்கஹயாய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார். அத்துடன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதி தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை…
“கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறியப்படுத்தவும்” அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இஸ்மாயில் எம்.பி!
சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் நேற்று (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறை மண்ணின் தேவைகள் கருதி இஸ்மாயில் எம்.பி அவர்களினால் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கதிற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் விபரங்களையும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்களையும் கண்டறிதல். கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்மந்தமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறியப்படுத்தவும். பொதுமக்களுக்காக வாரத்தில் ஒரு நாளை மண் அகழ்வதற்கான…
