Main News
“எம்மை வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள்” அமைச்சர் றிஷாத்
எம்மைத் தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள், இதன் மூலம் எனது அரசியல் இருப்பை இல்லாமலாக்க முடியுமென்று தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி, வெள்ளிமலையில் நேற்று மாலை (16/10/2016) இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் றிசாத் மேலும் கூறியதாவது, கடந்த 16 வருட காலமாக நான் முன்னெடுக்கும் முயற்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து, கூட்டங்களை கூடிக் கூடி, அவற்றை எவ்வாறு…
முறையான சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் றிஷாத்
கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் இந்தத் தகவலை…
பைசால் காசீமுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் – அமீர் அலி
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செல்லவுள்ளதாக அக் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
அடுத்தவர்களுக்கு உதவும்போது மனிதாபிமானத்தை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்!
அடுத்தவர்களுக்கு உதவும்போது இன, மத பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் முன்னிறுத்தி செயற்படுங்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டி “ மஸ்ஜிதுல் குலபாஉர் ராஷிதீன்” புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் இந்த விழாவில் விஷேட அதிதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை பங்கேற்றிருந்தார். கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மாகாணசபை உறுப்பினர்…
உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களும் கலந்து கொண்டார்.
ஆசூராவில் நடந்த கர்பலா! ஆட்சி மாற்றத்தின் ஒளிநிலா!
‘தீனைக்’;காக்கவும், தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் ‘அஹ்லுல் பைத்‘ என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு புகட்டிய அறிவு நாதம். இன்றைய அரசியல் வரலாற்றில் ‘குலபாயேராசிதீன்கள்‘ ஆட்சியின் பின்வந்த உமைய்யா ஆட்சியில் முஆவியா (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஸீத் என்பவர் மக்கள் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங் கெட்ட, குடிகார மன்னனாக ,மாற்றான் மனைவியை வைத்திருந்ததன் காரணமாக ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பேரன் ஹூஸைன் (ரலி) அவர்கள்…
இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது
இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல்…
மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP
இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.
விவசாயப் பெண்கள் மாநாடு
விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட அருண, (தோட்டத்துக்கு ஒளி) எனும் உர மானிய உதவி வழங்கல், விவசாயக் கிணறுகளை அமைத்தலுக்கான உதவி வழங்குதல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டபோது.
முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸின் நன்றி மடல்
2016-10-08,09 தம்பபண்ணியில் இடம்பெற்ற 26 வருட இடம்பெயர்வு ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக வருகை தந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் தேசியத்தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் சகோதரர் ரியாஜ் பதியுதீன் அவர்களுக்கும் அல்ஜெஸீரா விளையாட்டுக்கழகம், தம்பபண்ணி இளைஞர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வருகை தந்த இளைஞர்கள்,பெரியோர்கள் இதை சிறப்பாக நடாத்தி முடிக்க உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸ் தெரிவித்துள்ளார்.
ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு குறித்து அமைச்சர் றிசாத் அனுதாபம்!
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் வபாத்தான செய்தியறிந்து, தான் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து இந்த வேதனையைத் தானும் பகிர்ந்துகொள்வதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். ஆதில் பாக்கிர் மாக்கார் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலே திறமையுள்ள மாணவராகவும், துடிப்பானவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே கல்வியிலே உயர்நிலையை அடைந்து, தலைமைத்துவம் சார்ந்த பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்தவர். இளைஞர் சமூகத்துக்கு அவர்…
கல்வி நிலை மேம்பாடடைய அரசியல்வாதிகள், தனவந்தர்கள், ஆர்வலர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்
முஸ்லிம் சமூகம் கல்வி நிலையில் உயர் நிலை அடைய வேண்டுமானால் அந்த சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மற்றும் கல்வியில் ஆர்வங்கொண்ட சிவில்சார் அமைப்புக்கள் ஆகியவை ஒரே நேர்கோட்டில், ஒருமித்து பயணிக்க வேண்டியது இன்றியமையாத்தென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் 2014 – 2015 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (13/10/2016) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கல்லூரியின் அதிபர் திருமதி.சிஹானா…
