Headlines

புத்தளம் என்பது குப்பை மேடல்ல..!!!பாராளுமன்றத்தில் அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி..

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 28 ம் திகதி நடந்த விசேட விவாதத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் உரையாற்றிய போது… “இந்த சந்தர்ப்பத்தை எனக்களித்தமைக்கு நன்றி… முதற்கன் மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தமது உறவினர்களை இழந்த இன்னலுறும் அவர்களது குடுப்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன்.. குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இங்கு பேசிய அனைத்து எதிர்…

Read More

அமானுல்லாஹ் அதிபரின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பு அமைச்சர் றிஷாட் அனுதாபம்

முன்னாள் அதிபர் அமானுல்லாஹ் ஆசிரியரின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். மன்னார் தாராபுரத்தில் சிறந்த கல்விக்குடும்பத்தில் பிறந்த அவர், நீண்ட காலம் நல்லாசிரியராகவும் திறமை மிக்க அதிபராகவும் பணியாற்றியவர். அவரது தந்தையார் ஒரு புலவர் ஆவார். . எனது அரசியல் வாழ்வில் மறக்க முடியாத ஒருவராக அவர் இருந்தார். தந்தையைப்போல எனது அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்குபவராகவும் உற்சாகம் அளிப்பவராகவும் இருந்து அந்தப் பணிகளில் என்னுடன் இணைந்து செயற்படுபவராகவும்…

Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள் அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென அவர்களுக்கு தேவையான பொருட்களை அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்களும் சதொசவில்…

Read More

மன்னாரிலும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கங்களில் நேற்று இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கு உதவும் நடமாடும் சேவையைத்தொடர்ந்து இன்று காலை (2017.05.29) மன்னாரிலும் நடமாடும் சேவை இடம்பெற்றது.  தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான இந்த விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (29) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் தலைவர்களும்…

Read More

இயற்கை அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனிதமான நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் சுகநலத்திற்காகவும் மரணித்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும் பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். புனித நோன்பு மாதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்…

Read More

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்

சிறிய ஆடை தொழிற்சாலை திறப்பு விழா கண்டி அருப்பொலையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இச் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்தியமாகான சபை உருப்பினர்களான லாபீர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தாரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினைக்கு தீர்வுக்காக நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் தலைமையிலான குழுவினர்.

  தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபை தலைவர் பௌசி, இணைப்பாளர் ரசாக் நளீமி, நீனகேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவர் அடங்கலாக இன்று பிற்பகல் நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்து இப்பிரதேசத்தில் இருக்கும் காணி முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டதுமாகவும் காணப்படுவதோடு காணிக்கான உறுதிப்பத்திரம் உட்பட உரிமத்துவதுக்கான சகல ஆவணங்களும் எமது சகோதரர்களிடம் காணப்படுவதையும் காண்பித்து விகராதிபதிக்கு…

Read More

வவுனியாவில் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (28) பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜயதிலக்க…

Read More

வெள்ளப்பாதிப்புற்ற பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம்

மத்துகம, அகலவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன் (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார். போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள பலந்தாவ கிராமத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் பத்துரலியவில் வைத்து நிவாரணப் பணியாளர்களிடம் நிதியுதவி வழங்கி வைத்தார். அத்துடன் லக் ஹந்துர விகாராதிபதியிடமும் பாதிக்கப்ட்ட மக்களுக்கான நிதியுதவியை வழங்கினார். அத்துடன் உலர் உணவுப்பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெருமவும் அந்த பிரதேசத்திற்கு…

Read More

பிரதியமைச்சர் ஹரீசின் தந்தையாரின் மறைவுக்கு றிஷாட் அனுதாபம்

ஊடகப்பிரிவு பிரதியமைச்சரின் தந்தையாரின் மறைவு தனக்கு பெருங்கவலையளித்ததாக அமைச்சர் றிஷாட் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக சேவையாளரான முர்ஹூம் ஹரீசின் தந்தையார் கல்முனை மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். ஏழைகளுக்கும் தன்னிடம் உதவி நாடி வருபவர்களுக்கும் இல்லை என்று சொல்லாது வாரிவழங்கிய கொடைவள்ளலாக விளங்கியவர். சமூகத்தின் மீது எப்போதும் அக்கறையுடன் செயற்பட்டுவந்த அவர் சமூகப்பிரச்சினைகளை  தீர்த்து வைப்பதில் முன்னின்று உழைப்பவராக  விளங்கினார். அவரது புதல்வர் ஹரீஸ் தந்தையாரின் வழியில் சமூக வேவையில் ஈடுபட்டு பின்னர் அரசியலுக்கு…

Read More

வெள்ளப்பாதிப்புற்றோருக்கு மனமுவந்து உதவுங்கள் றிஷாட் வேண்டுகோள்!

ஊடகப்பிரிவு தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினாலும் வெள்ளப்பெருக்கு  மற்றும்  மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவ வேண்டுமென அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்புக்கருதி வெளியேறி பல்வேறு இடங்களில் தஞ்ஞம் புகுந்துள்ளனர். இவ்வாறு கஷ்டப்படும் மக்களுக்கு முடிந்தவரை கைகொடுப்பது நமது கடமையாகும். என்றும் அமைச்சர் றிஷாட் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்ததத்தினால் மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறை, களுத்துறை, மற்றும் ஹம்பாந்தோட்டை…

Read More

சமூக ஒற்றுமையை வலுவூட்ட நிரந்தர கட்டமைப்பு இன்றியமையாதது. குருநாகலையில் அமைச்சர் ரிஷாட்.

ஊடகப்பிரிவு.  முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில் நமது பண்பான செயற்பாடுகள் பெரிதும் அமைய வேண்டும். அதற்கான நிரந்தரமான, நிலையான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் நம்முன்னே எழுந்து நிற்கின்றதென அமைச்சர் றிஷாட் பதியூதீன் தெரிவித்தார். முஸ்லிம்களின் சமகால பிரச்சினை, சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு,தொடர்பாக குருநாகல் கண்டி றிச் ஹோட்டலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் குருநாகல் கிளை ஏற்பாடு…

Read More