Main News
நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து
ஊடகப்பிரிவு நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று அதிகாலை 2017.06.06 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள எரிக்கப்பட்ட கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் சம்பவங்களை பார்வையிட்டதுடன் நிறுவன உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார். நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் உரையாடிய அவர் இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் முதற்தடவை அல்ல…
இறப்பர் பாஸ்மதி வெறும் நாடகமே சதொச தலைவர் அறிவிப்பு
ஊடகப்பிரிவு லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசியை பூரண பரிசோதனைகளின் பின்னரே எடுக்கப்பட்டதாகும.; என்றும் குறித்த அரிசி 2019.03.17 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தபடக்கூடிய நிலையில் உள்ளது. நேற்றைய தினம் 05.06.2017; முதல் சமூக வலைத்தளங்களில்…
சதொச நிறுவனத்தின் வளர்ச்சியை மழுங்கடிக்க முயற்சி வதந்திகளை நம்ப வேண்டாம்.
ஊடகப்பிரிவு சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத இறப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட் நடவடிக்கையானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மற்றும் சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் செயலாகும் என அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி 2017.05.15 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து 20 மெட்ரிக்தொன் பாஸ்மதி அரிசி…
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களுக்கு அமைச்சர் ரிஷாட் நேரில் விஜயம் புனரமைப்புக்கு நிதி உதவியும், அகதிகளுக்கு நிவாரணமும் கையளிப்பு
-ஊடகப்பிரிவு இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள், இந்து கோவில்களின் புணரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கும் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், வீட்டுப் பாவனைக்கு தேவையான பொருட்களையும்…
இரத்தினபுரி ஜூம்ஆபள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு
ஊடகப்பிரிவு இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாயலில் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். இவ்விசேட கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்று அன்பையும் நல்லெண்ணத்தையும்…
கவிக்கோவின் இழப்பு தமிழ் கூறும் உலகுக்கு பாரிய இடைவெளி அமைச்சர் ரிஷாட் அனுதாபம்
ஊடகப்பிரிவு உலகப் பெருங் கவிஞரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரஹமானின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவிக்கோவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த தமிழ் பேராசானின், எழுத்துக்களின் தாக்கம் இலங்கை எழுத்தாளர்களையும் ஆகர்ஷித்ததுடன் அவர்களை எழுதத் தூண்டியது. அதுமாத்திரமன்றி சிறந்த எழுத்தாளர்களாகவும் அவர்களை ஆக்கியது….
இரத்தினபுரி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நியமனம்
அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும்…
இலங்கையின் திரவ இயற்கை வாயு விநியோக முறையில் புதிய புரட்சி இந்திய கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடனான சந்திப்பில் அறிவிப்பு
(ஊடகப்பிரிவு) பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளடங்கிய தூதுக்குழுவினர் அமைச்சரை சந்தித்து இந்திய முதலீடுகள்…
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக எமது பணி.அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான்
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக எமது பணி. ===================================== விஜிதபுர ரஜமஹா விகாரை, கலாவெவ ஜும்மாப் பள்ளி மற்றும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்கள் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பதிக்கப்பட்ட எஹளியகொட, தொரனகம பகுதி மக்களிற்கு அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை ; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ரிஷாட் அறிவுறுத்தல்
ஊடகப்பிரிவு நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியவர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையொன்றை அவரமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட்…
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் பாதை அபிவிருத்தி
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் ம.நு.ப. பிரதேச செயலகத்திற்குரிய கொட்டியாவ சந்தியிலிருந்து துலாவெலி சந்தி வரையான 03 K.M சேதமடைந்த பாதை புனரமைப்புப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிற்குப் பதிலாக கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.R.M. தாரிக் அவர்கள் ஆரம்பித்து வைக்கும் போது
ஒரே நாளில் கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தம் அமைச்சர் ரிஷாட் முன்னிலையில் இன்று கைச்சாத்து
ஊடகப்பிரிவு இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் அடிப்படையில் தன்னியக்க முறையி;ல் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று காலை (30.05.2017) வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. கம்பனி பதிவாளர் திணைக்களத்திற்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப்படுத்த 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இந்தத் தொகையை கம்பனி பதிவாளர் திணைக்களம், வரியிறுப்பாளர்களிடமிருந்து அறவிடாமல் கம்பனி பதிவாளர் நிதியத்திடமிருந்து பெற்று வழங்குகின்றது….
