Main News
அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் நமக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த இனவாத பூதத்தின் நெருக்குவாரங்களுக்காக முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி, அதற்காக அணிதிரண்டு ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்களோ, அதே…
பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி…
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு அடித்தளமாக அமையட்டும் இவ் ஈகைத்திருநாள். அளவற்ற அருளாளனும், அன்பில் நிகரற்றவனுமாகிய வல்லநாயன் அல்லாஹ்வின் திருப்பெயரை துதித்து, புனித ரமழான் முடிவில், மலரும் இவ் ஈகைத்திருநாளை மகிழ்வுடன் வரவேற்று, மனித அவலங்கள் தீர்ந்திடபிரார்தித்து, மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய், மனதாற ஆர்ப்பரித்து மகிழ்ந்திட என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் முஸ்லிம் நெஞ்சங்களுக்கு. முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழிப்பதற்க்கு சர்வதேச பயங்கரவாதம் முனைப்புக்காட்டி அதில் வெற்றியும் கண்டு கொண்டிருக்கின்றது. இதுவே…
அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட்
– ஊடகப்பிரிவு முஸ்லிம்கள் அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிக்கமுடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நல்லமல்களையும், பண்பாட்டுப் பயிற்சியையும் நமக்களித்த றமழான் நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்று விட்டது. நாம் பூரிப்புடன் பெருநாளை கொண்டாடவுள்ளோம். புனித றமழான் மாதம் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில்…
பிரதி அமைச்சர் அமீர் அலியின் பெருநாள் வாழ்த்து
பெருநாள் வாழ்த்து நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி…
“நாங்கள் எதிர்ப்பில்லை. பிணை வழங்குங்கள்” என குற்றவாளிகளைக் காப்பாற்றும் பொலிசாரின் கபடச் செயல் வேதனையானது குருநாகலையில் அமைச்சர் றிஷாட்
சுஐப் எம் காசிம். “நாங்கள் எதிர்ப்பில்லை – பிணை கொடுங்கள்!, பிணை கொடுங்கள்” என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாசகாரி ஒருவருக்காக பொலிசார் மன்றில் கெஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் கபடத்தனமான செயலொன்று இந்த நல்லாட்சியில் அரங்கேறி முடிந்திருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் கெகுணுகொல்ல சதகா நிறுவனம் அரக்கியால பிரதேசத்தில் நேற்று மாலை (23.06.2017) ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து…
பாகிஸ்தான், இந்தோனேசியா, தாய்லாந்து தூதுவர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசரப் பேச்சுவார்த்தை
ஊடகப்பிரிவு உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘நாட்டரிசி மற்றும் சம்பா ஆகிய அரிசி வகைகளையே அவசரமாக இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம். என்றும் அமைச்சர் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில், இலங்கைக்கான தாய்லாந்து, பாகிஸ்தான்மற்றும் இந்தோனேசியா நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டாh…
கிண்ணியாவில் பல்ககலைக்கழக கல்லூரி அமைக்க அமைச்சரவை அனுமதி.
பாராளுமன்ற உறுப்பினரும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பல்ககலைக்கழக கல்லூரி; திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் அமைப்பதற்கான அமைசரவை அனுமதிக்காக தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதோடு , ரூபா 434 மில்லியன் நிதியில் மேற்படி பலகலை கழக கல்லுரி அமைபதட்கு அனுமதியளித்துள்ளது.
புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு
புத்தளத்திற்கு ஏன் இந்த அநியாயம் செய்கின்றீர்கள்? ரிஷாட் அமைச்சரவையில் கொதிப்பு நேற்றைய தினம் (20) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் “கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சரவை எந்தவிதமான எதிர்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த போது அதற்கு கடுமையான எதிர்ப்பை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சம்பிக்க…
பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லை என என்னால் காண முடிகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தாரும் இராப்போசன விருந்துபசாரமும் அதன் தலைவர் வை.கே.றஹ்மான் தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு…
ரவி ஏற்பாடு செய்த இப்தாரில் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கலந்துகொண்டார்.
வெளிவிவகார அமைச்சர் ரவிக்கருணா நாயக்கவின் ஏற்பாட்டில் இன்று (19) றிச்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்றூப், நவவி மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தளம் நகர் பகுதி மின்வெட்டுக்கு தீர்வு..
கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில் எம்மக்களுக்கு மிகுத்த அசௌகரியத்தை அளித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 21 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதிக்கு இடைப்பட்ட சில நாட்களிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. புனித நோன்பு பெருநாள் காலப்பகுதியில் இது எமது மக்களை சிரமப்படுத்தும் என்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை…
பாயிஸ் தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மகளீர் அணி உதயம்.
கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொலன்னாவ பிரதேசத்தின் முதலாவது ACMC மகளிர் அணி காரியாளயம் ஆரம்பிக்கும் கூட்டம் வெல்லம்பிட்டி பொல்வத்தையில் மேல்மாகான சபை உறுப்பினர் எ.ஐெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் சுயதொழில் செய்வேருக்கு தையல் இயந்திரமும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கொப்பி புத்தகமும் வழங்கப்பட்டது.
