Headlines

அப்துல் கலாம் காலமானார்

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…

Read More

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் குறித்த ஏழு பேரையும் தமிழக அரசாங்கம் விடுவிக்க உத்தரவிட்டது. எனினும் இதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நிறுவப்பட்ட அரசியல் சாசன நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம்…

Read More

மன்மோகன் சிங் பாதுகாவலர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட பெண்!

இந்திய, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களையே அனுமதிக்க முடியும் என அவர் கூறி…

Read More

இந்திய ரூபாய் நோட்டுகளில் நோய்க் கிருமிகள்!

இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக ளவில் நோய்க் கிருமிகள் இருப்பதாகப் புதிதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள், அதிக அளவில் நோய்க் கிருமி கடத்திகளாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய அறிவி யல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆராய்ந்தனர். இதற்காக…

Read More

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவு 48வது முறையாக உடைந்து விழுந்தது.

கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி திறப்பு விழா நடைப்பெற்ற சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை, கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்து விபத்து நேரிட்டு வருகிறது. அதிகாரிகள் விசாரித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தாலும், விசாரணையின் முடிவு என்னவென்று எந்தத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்தின் 2 வது முனையத்தின் கண்ணாடிக் கதவு இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் புதுவை ஆளுநர் விமான நிலையத்துக்கு…

Read More

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வாட்ஸ்-ஆப்

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும். கடந்த 1982ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு…

Read More

ஊழலில்லா மாநிலமாக டெல்லியை மாற்ற பட்ஜெட்!

ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆம் ஆத்மி டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு முறையும், டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தே தேர்தலில் வெற்றிப் பெற்றது. அதன் படி சில அரசு அதிகாரிகளின் பதவிகூட ஊழல் குற்றச்சாட்டால் பறிபோனது. ஊழல் குறித்த புகார் தெரிவிக்க தனி தொலைப்பேசிப் புகார் எண்கள் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது….

Read More

கடல் நடுவே விமான நிலையம்!

– என்.மல்லிகார்ஜுனா – சுற்றிலும் கடல், நடுவில் விமான நிலையம். அதுவும், நம் நாட்டில்தான் இருக்கிறது என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன், விமானத்தில் இருந்து பார்த்தால், கடல்தான் தெரியும். முதன் முதலாகப் பார்ப்பவர்கள் மெர்ஸ்ஸலாயிடுவாங்க. ஆனால், அடிக்கடி சென்று வருபவர்கள் மட்டும் கடலின் அழகை ரசிப்பார்கள். சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த ரன்வே, லட்சத்தீவில் உள்ள அகட்டி (Agatti) விமான நிலையமாகும். அதிசயமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று….

Read More

நோன்பை பற்றி அருள்மறையும், நபிமொழியும்!

ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் : “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183) “(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்)…

Read More

ரமழான் நோன்பு கடைப்பிடிக்க ஹிந்துக்கள் முடிவு!

மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் வாழும் ஹிந்துக்கள், தங்களுடைய அண்டை வீடுகளில் வாழும் முஸ்லிம்களுடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, லக்னெüவில் புந்தேலி சமாஜ் என்னும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாரா பட்கர் கூறியதாவது: “மஹோபா நகரில் உள்ள உதால் செக் பகுதியில், வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம் சமூகத்தினருடன் சேர்ந்து ரமலான் நோன்பு நோற்க முடிவு செய்துள்ளோம். 60 நபர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேரி, இஃப்தார்…

Read More

புத்தமத அறிஞர் சைலேந்தர் சிங் இஸ்லாத்தில் இணைந்தார்!

சைலேந்தர் சிங் இவர் இநதியாவை சார்ந்தவர் புத்த மத அறிஞர் வயது 33. இந்தியவில் பட்டபடிப்பை முடித்த அவர் மேல் படிப்பிர்காக மலைசியா சென்றார் மலைசியாவில் படித்து கொண்டிருந்த சைலேந்தர் சிங்கை பல்கலை கழகத்தில் தம்முடன் படித்து கொண்டிருந்து அரபு நாட்டு நண்பர்களின் நடைமுறைகள் ஈர்த்தது இதனை தொடர்ந்து இஸ்லாத்தை பற்றி ஆராய தொடங்கினர் சைலேந்தர் என்ற சிங் புத்த மத அறிஞர் பிறகு அவருக்கு துருக்கி செல்லும் வாய்ப்பபு கிடைத்தது துருக்கியில் அமைந்துள்ள ஹம்தி என்ற இறை…

Read More

ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு: ஆசிரியை ராஜினாமா!

தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேரள சமாஜத்தின் நிர்வாகத்தில் ஜூபில என்ற பள்ளிக்கூடம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷினா என்ற ஆசிரியைக்குக் கடந்த மே மாதம் வேலை கிடைத்தது. ஜூனில் பள்ளி திறந்ததும் ஹாஷினா வேலைக்குச் சென்றுள்ளார். தலையில் ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு வந்த ஆசிரியை ஹாஷினாவிடம் முதல் நாளிலேயே, “இதற்குப் பள்ளி நிர்வாகம்…

Read More