Headlines

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம்

இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர். வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக்…

Read More

ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது.  பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21),  தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23),  உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.

Read More

‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’

விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம்…

Read More

பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக்கப்படும் – சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்­தானை இந்­தியா 4 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பா.ஜ.க.தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகு­தியில் கன­ரக ஆயு­தங்­க­ளுடன் பாகிஸ்தான் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இந்த நிலையில் இந்­தியா- , பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்­தி­யா­வுக்­குதான் பேரி­ழப்பு ஏற்­படும் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தள­பதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்­துள்ளார். இது தொடர்­பாக…

Read More

மகி நூடில்ஸ் மீதான தடையை நீக்கியது மும்பை உயர் நீதிமன்றம்

மகி நூடில்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மகி நூடில்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் இருந்ததாகக் கூறி, மத்திய உணவு தர பாதுகாப்பு ஆணையம் தடை விதித்து இருந்தது. அதனையடுத்து இந்தியாவில் மகி நூடில்ஸ் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தடையை எதிர்த்து மகி நூடில்ஸ் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் வழக்குத் தொடர்ந்து இருந்தது. இவ்வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், மகி மீதான தடையை…

Read More

500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!

ஹரியானா மாநிலத்தின் ‘ஹிசார்’ கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர். உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக ‘பகானா’ என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள ‘பகானா சன்கர்ஷ் சமிதி’ என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும்…

Read More

யாகூப் மேமனின் கடைசி வார்த்தை

“நீங்கள் உங்கள் கடமையை செய்கிறீர்கள்; நான் உங்களை மன்னிக்கிறேன்” தூகிலேலேற்றும் கடைசி தருணத்தில் கூட யாகூப் மேமன் சற்றும் நடுங்கவில்லை, மாறாக தனது இறுதி நேரத்தில் மிகவும் கம்பீரமாகவும் நிலை குலையாமலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தூக்கிலேற்றிய அலுவலரிடம் யாகூப் பேசிய கடைசி வார்த்தை : “மை அவுர் மேரா ரப் ஹீ ஜான்தா ஹை கே அஸ்லியத் கியா ஹை” “ஆப் லோக் தோ டியூட்டி கர் ரஹே ஹைன்; இஸ்லியே மை ஆப் கோ மாஃப் கர்த்தா…

Read More

ஆபாச இணையதளங்கள் அதிரடி முடக்கம்

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்திய மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்துஇந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச தளங்கள்ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், இத்தகைய தளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில்ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை இன்னும் நடந்துவருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், திடீரென…

Read More

அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்ய 1.85 ஏக்கரில் இடம் தேர்வு!

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இடத்தில் 4 ஏக்கரில் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு இன்று மதியம் முதல் அப்துல் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் ராமேஸ்வரம் வர உள்ளனர் என்பதால், மத்திய உளவுத்துறையினர் மற்றும் மாநில போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில்,…

Read More

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். 2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். 3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி…

Read More

கலாமின் இறுதிப் புகைப்படம்!

எண்ணற்ற இளைஞர்களை வழிநடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக ஓய்ந்துவிட்டது. ஆம். இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இந்த பூமியில் இருந்து விடைபெற்றார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அப்துல் கலாம் நேற்று (27) காலமானார். அவரது உடலம் இன்று (28) காலை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அப்துல் கலாமின் உடலம் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி டுவிட் ”வாழத்தகுதியான பூமி” என்ற தலைப்பில்…

Read More

அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. முன்னதாக, இன்று காலை ஷில்லாங்கில் இருந்து அசாம் மாநில தலைநகர் கவுகாத்தி வந்த அவரது உடலுக்கு அசாம் மாநில முதல் மந்திரி தருண் கோகாய், மூத்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உட்பட பல முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம்…

Read More