Headlines

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் ஹைராத் மீனவ சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்திப்பு

-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அதிரடி; காணமல் போன படகுகள் கண்டுபிடிப்பு

நேற்று [2016/01/05] அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தினர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்தனர். இதன் போது அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த சகோதர்கள் ஆறு பேர் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று படகுடன் காணமல் போன சம்பவம் சம்பந்தமாக பிரதியமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஆறு நாட்களின்…

Read More

21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஹான் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும்…

Read More

கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் – பிரதி அமைச்சர் அமீர் அலி

கல்வியின் மூலமே சிறந்த சமூகத்தை நாம் உருவாக்கமுடியும் என்று வாகரை பால்சேனை கலை மகள் வித்தியாலயத்தில் பன்னையாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி  குறிப்பிட்டார். இந் நிகழ்வு மில்கோ நிறுவனத்தை பிராந்திய முகாமையாளர் க கனகராஜா தலைமையில் இடம்பெற்றது தொடர்ந்தும் உரையாற்றுகையில். .. உழைக்கும் மக்கள் என்றும் மேன்மையானவர்கள் அவர்களின் உழைப்பு இந்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு என்றும் துணையாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்வியை உயர்ந்த நிலைக்கு…

Read More

முன்பள்ளி மாணவர்களின் ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும் – A.R.M.ஜிப்ரி

முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சம்மாந்துறை அல் – அர்ஷத் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்டார் பாலர் பாடசாலையின் ஆண்டிறுதி அறுவடை எனும் தலைப்பிலான பரிசளிப்பு கலைவிழா அதன் அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில்…

Read More

கல்விமான்களை கொண்ட சமூகத்தை உருவாக்குவதே எனது கனவு – பிரதி அமைச்சர் அமீர் அலி

எனக்கு பிடித்த இரண்டு சமூகங்ளில் ஒன்று உழைக்கும் சமூகம் மற்றையது கல்விக்காக பாடுபடும் சமூகமாகும். உங்களை பொறுத்தரை நீங்கள் அதிகமாக உழைக்கும் பால் பண்ணையாளர்கள். உங்களுடைய உழைப்பை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கின்றேன். என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மில்கோ பால் பண்ணையாளரின் முதலாம் தரத்திற்க்கு செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் க. கனகராஜா தலைமையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம…

Read More

ஊடகவியளாளருக்கும் எனக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை – பிரதியமைச்சர் அமீர் அலி

நேற்று (28) மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானத்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு இவ்வாறு கருத்தினை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில். சில மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதனை எங்கு பேச வேண்டும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை மேலும் தாங்கள்…

Read More

சண்டை அல்லது கருத்து மோதல்கள் ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு-அமீர் அலி

இந்த ஓட்டமாவாடிச் சந்தியில் ஓர்  விபத்து நடந்தால் அங்கு சண்டை அல்லது கருத்து மோதல்கள் இடம் பெறும் அவ்வாறான கருத்து மோதல் கூட ஆங்கில மொழியின் ஊடாக இடம் பெறுவது தான் என் கனவு அவ்வாறான என் கனவினை இந்த கல்லூரி கடந்த பத்து வருடங்களாக நிபர்த்தி செய்து வருகின்றது. கடந்த, 26. 12 . 2016  அன்று கல்குடா இண்டர் நெஷனல் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே   மேற்கண்டவாறு தெரிவித்தார்,…

Read More

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் என். வில்வரெட்னம் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி

27.12.2016 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார, முகாமையாளர்களான பஷீர், அஸீஸ் மற்றும் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Read More