Headlines

சம்மாந்துறையில் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பம்

– நூர் – மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும் மேற்கொள்ளும் செயலை கண்டித்தும் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் உறவுகலுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த வாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாடு பூராகவும் 2 லட்சம் கையெழுத்து பெரும் இந்த செயற்திட்டம் இன்று நாடு பூராகவும்…

Read More

திருகோணமலையில் கையெழுத்து இடும் நடவடிக்கை துரிதம்

– அபூ அஸ்ஜத் – மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள அமைப்புக்களின் செயலணி கணடடித்தும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையான முறையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரித மாக மேற்கொள்ளய கோறும் வகையில் நாடு தழுவிய முறையில் 2 இலட்சம் கையொப்பங்கள் பெரும் வேலைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ,கிண்ணியா,மூதுார் பிரதேசங்களிலும் மக்கள் தமது கையொப்பங்களை இட்டு வடபுல முஸ்லிம்களுக்கு ஆதரவு…

Read More

ஏறாவூரில் கையெழுத்துக்கள் பதிவு

பாத்திமா ஷா்மிலா மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் வெள்ளிக்கிழமை  தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை 12.06.2015 பகல் 1.30 மணிக்கு இந்தக் கையெழுத்துச் சேகரிப்பு நாடெங்கிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகை பிரசங்கத்தை நிகழ்த்திய ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் கால்நூற்றாண்டு கடந்தும்…

Read More

மஹிந்தவை நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம்: அமீர் அலி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.

Read More

ஏறாவூரில் சிறுவன் கடத்தப்பட்டு தாக்குதல்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில்  12 வயதுச் சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வீதியைச் சேர்ந்த முஹம்மத் அஸ்லம் (வயது 12) என்ற மாணவனே கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட சிறுவன் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சந்தேக நபரைத் ஏறாவூர் பொலிஸார் தேடி…

Read More

பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்கு உதவி

இர்ஸாத் ஜமால்தீன் குவைத்தில் இயங்கும் அறுகம்பே அந்நஜாத் நலன்புரி ஒன்றியத்தினரால் பொத்துவில் அந்நஜாத் ஜும்மா பள்ளிவாயலுக்குதரைவிறிப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அப்பின் தலைவர் அப்துல் ஹலீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் “ரமழானுக்கு பள்ளிவாயல்களை அழங்கரிப்போம்” என்ற வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக குறித்த தரைவிறிப்பு இன்று10 வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பின் முன்னால் செயலாளர் மெளலவி யூ.எல்.அப்துல் அஸீஸ், முன்னால் தலைவர் எம்.ஏ.ஏ சித்தீக், பொருலாளர் மாஹீர் சகிதம் ஏனைய உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிறுவாக சபைத் தலைவர் மெளலவி எஸ்.எச் அப்துல்…

Read More

நான் கட்சி மாறவில்லை.. பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேண்டாம்

-எம்.ரீ.எம்.பாரிஸ்- கட்சி மாறவில்லை பொய் பிரச்சாரத்திற்கு இடமளிக்க வேன்டாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகாக நான் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன். என  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு விஷேட பேட்டி.. இலங்கையிலுள்ள சகல உள்ளுராட்சி மன்ற சபைகளும் கலைக்கப்பட்டு இந்நாட்டு மக்கள் புதியதொரு பாராளு மன்ற தேர்தல் ஒன்றையும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்பாத்து காத்திருக்கும் இக்கால கட்டத்தில் தாம் சார்த்த கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும்…

Read More

மபாசா பள்ளிவாசல் மூடலும் பொத்துவில் சகோதரர்களின் முயற்சியும் (Photo)

-கபூர் நிப்றாஸ்-  கடந்த மாதம் 28 ஆம் திகதி சட்டரீதியாக மூடப்பட்ட பொத்துவில் 5 பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் மபாஸா பள்ளிவாயலினை மீட்பதற்கு அதன் நிருவாகம் பல முயற்சிகளை எடுத்தது, இருந்தும் அம்முயட்சிகளுக்கு பயன் கிடைக்காமல் போனது. . எதிர்வரும் ரமழானில் பொதுமக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற கட்டாய தேவையாக இருந்த இந்த பள்ளிவாயலினை வேறு ஒரு இடத்தில் அமைப்பதாக நிருவாகம் முடிவு செய்தது , தற்போது அதற்கான வளவு பள்ளிவாயளிட்காக வாங்கப்பட்டுள்ளது.  அதில் முதற்கட்டமாக தற்காலிக கட்டிடம்…

Read More

வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்

– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…

Read More

சுயநல அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க மக்கள் தயார்

– நூர் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய…

Read More

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!

அம்பாறை, அட்டளைச்சேனை கோணாவத்தை கடற்கரை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்;டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரினால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை எட்டாம் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகாமையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் முன் டயரில் ஏற்பட்ட சேதம் காரணமாக இரவு 8.15 மணியளவில் சைக்கிளின் முன் டயரினைக் கழற்றி திருத்துவதற்காக உரிமையாளர் கொண்டு சென்ற போது பாதையோரமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது….

Read More

சட்டவிரோத மரங்கள் கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிபாய்ந்தகல் பொண்டுகல்சேனை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் முப்பது முதுரை மரங்களை வட்டார வன இலாகா அதிகாரிகள் நேற்று (09) பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி என்.நடேசன் தெரிவித்தார். புலிபாந்தகல் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கல் வெட்டப்படுவதாக வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் நேற்று  (09) புலியாந்தகல், மூக்கர்ரகல், பொண்டுகல்சேனை போன்ற பகுதிகளுக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே பொண்டுகல்சேனை பகுதியில் இம்…

Read More