Headlines

ACMC நிந்தவூர் கட்சிக் காரியாலயம் திறந்து வைப்பு

கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில்…

Read More

றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு

– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…

Read More

அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!

– அப்துல் அஸீஸ் ​- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் சனி,…

Read More

அ.இ.ம.கா வேட்பாளர் சிராஸிக்கு இறக்காமம் மக்கள் பாரிய வரவேற்பு (Photo)

– அகமட் எஸ். முகைடீன் – சமூகத்திற்கான காத்திரமான முன்னெடுப்புக்களை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இறக்காமம் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டார். கல்முனை மாநகர முன்னாள் முதல்வராக சிராஸ் மீராசாஹிப் மக்கள் பணியாற்றியபோது அவரிடம் காணப்பட்ட ஆற்றல், சேவை நலம், விவேகம், வேகம் என்பவற்றை…

Read More

பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை மு.கா. சமூக நலனில் கொள்வதில்லை -ஜெமீல்

-எம்.வை.அமீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டு ஒருசிலரின் அபிலாசைகளை நிவர்த்திக்கும் கட்சியாகி கீழ்மட்டத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையூடாக பாராளமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவருமான எ.எம்….

Read More

அதிகாலை வீதி விபத்தில் கார் சுக்குநூறாகியது!

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் -கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதி மருங்கில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதுண்டு சுக்குநூறாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் தனது மகனைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று சொந்த ஊரான பொத்துவிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த…

Read More

அம்பாறையில் றிஷாதுக்கு வெற்றி கிடைக்கும் – அதாவுல்லாஹ்

ஏ.எச்.எம்.பூமுதீன் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா வெற்றி பெறும். அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதி என முன்னாள் அமைச்சரும் தே.கா தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினரை அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்து உரையாடும்போதே மேற்கண்ட கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார். அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் என்பது இறுதிவரை எதிர்பார்க்கப்படாத ஒரு விடயம். எனினும், அக்கட்சி தனித்து களமிறங்கியுள்ளமை மு.கா.வுக்கு உண்மையில் சவால்தான். அ.இ.ம.கா அம்பாறையில் போட்டியிடுவதை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என…

Read More

வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை…

Read More

ஐ.தே.க – அ.இ.ம.கா  கூட்டணி: மட்டக்களப்பு மக்கள் வரவேற்பு

நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து போட்டியிடுகின்றது இதில் முதன்மை வேட்பாளராக உள்ள முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியையும் அவருடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களையும் ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் நேற்று (13.07.2015) வரவேற்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாயல் ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்,வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல், மீறாவோடை,…

Read More

மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம்

அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை…

Read More

அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை உள்ளது -S.M.M.இஸ்மாயில்

எம்.சி.அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் செரிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை. அதற்காகத்தான் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தகுதியான பலம்வாய்ந்த அணியின் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் எமது கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றும். என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்….

Read More

விஷேட துஆ பிரார்த்தனை

அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.​ முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்ட இவ்துஆப் பிரார்த்தனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகர் அப்துல் மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில்…

Read More