Headlines

ad34@hFacMC

விஸ்டம் சர்வதேச பாடசாலை வாசிகசாலை மற்றும் கணணிக்கூட திறப்பு.

களுத்துறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் இயங்கும், விஸ்டம் சர்வதேசப் பாடசாலை, பேருவளை சீனங்கோட்டை கிளையின் வாசிகசாலை மற்றும் கணணிக்கூடம் திறப்பு விழா இன்று (18) திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், கெளரவ அதிதியாக பேருவளை நகர சபை உறுப்பினர் ஜனாப் தில்ஷாத் அன்வர், விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவர் அஷ்ஷெய்க் பெளஸர் (நளீமி), அதிபர் ஷகீல்…

Read More

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

“இலங்கையுடன்  நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு   விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு (INVESTMENT,PROTECTION AND PROMOTION-IPP) ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளது. “இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான்  தனது அயல்  நட்புறவு நாடுகளுடனும் பிராந்தியத்திற்கு அப்பாலும்  விமான சேவையை நடாத்தி உள்ளூர் உற்பத்தி பொருட்களை எடுத்து சென்றது….

Read More

அரச அதிகாரிகள், காணி பெற முடியுமென்றால் அப்பாவி மக்களுக்கு ஏன் தடை போடுகின்றார்கள்.? – ரிப்கான் பதியுதீன் ஆவேசம் 

” நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார். 25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாரும் அந்தக் காணிகள் அரச காணிகள் என அதிகாரிகளால் கூறப்படுவது தொடர்பிலும்,  எழுந்துள்ள பிரச்சினையை அடுத்து முருங்கன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கான…

Read More

முட்கம்பி வேலிக்குள்ளே முடங்கி கிடந்தவர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர்; தமிழ் ,சிங்கள ,முஸ்லிம்களை அரவணைத்து செல்வதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!  

முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட  தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு வலுவூட்டி வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், அல் மதீனா முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்ற “மதி நா” புத்தக வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (16) கலந்து கொண்டார். அதிபர்…

Read More

ஒலுவில் துறைமுக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் விஜயம்!!!

அம்பாறை ஒலுவில் துறை முகம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய மூன்றாம் கட்ட விஜயம் ஒன்றை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மேற்கொண்டார். குறித்த விஜயமானது இன்று (17) இடம் பெற்றதுடன் மீனவர்களின் பிரச்சினைகள், கரையோர கடலரிப்பு போன்றனவும் தொடர்பில் ஆராயப்பட்டன இது தொடர்பாக பொறியியலாளர் குழுவினை நியமித்துள்ளதுடன் தெளிவான பட ஆதார விளக்கங்களையும் பிரதியமைச்சர் மீனவர்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களுக்கும் முன்வைத்தார். இது தொடர்பில் தெளிவான முடிவுகளை நிரந்தரமான…

Read More

தமிழ் மக்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு அமைச்சர் அதிரடி உத்தரவு.!

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் கட்டண விபரங்கள் தனி சிங்கள மொழியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதின் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் வவுனியா மாவட்ட…

Read More

பாலமுனை பள்ளிவாயலுக்கு இரண்டு மில்லியன் நிதியுதவி

பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுக்கான காசோலை பள்ளிவாசல் பரிபாலன சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு  (2019.03.16) அஷர் தொழுகையை தொடர்ந்து ஜும்ஆ பெரி பள்ளிவாசலில் இடம்பெற்றது. மேற்படி நிதியானது பிரதான வீதியில்…

Read More

ஒலுவில் கடலரிப்பு மற்றும் துறைமுகம் சம்பந்தமாக பிரதேச முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

ஒலுவில் கடலரிப்பு மற்றும் துறைமுகம் சம்பந்தமான இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வதற்காக எதிர்வருகின்ற 2019.03.31ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திற்கு வருகைதரவிருக்கின்ற உயர்மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இன்று (17) ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன் போது துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

ஆறு சத வீத நிதியையேனும் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்பதே சர்வதேச நியமம் – கொழும்பு பட்டமளிப்பு விழாவில் பிரதி அமைச்சர் மஃரூப்

நமது மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை பெற்று தொழிலின்றி வீடுகளியே முடங்கி கிடக்கும் நிலைக்கு மாற்றமாக தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சிறப்பான தொழில் மேற்கொண்டு வருவது தனியார் பல்கலைக்கழகங்களின் தேவையையும் சிறப்பையும் உணர்த்தி நிற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஃரூப் தெரிவித்தார் கொழும்பு தெகிவளையை தளமாக கொண்டு இயங்கி வரும் சுகாதார, விஞ்ஞான மருத்துவ மற்றும் ஐவா (CHSMC & IWA Campus) பல்கலைக்கழகத்தின்…

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

கடந்த வருடம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று16.07.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய ,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களின் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில்  பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் , ஜெளபர், நெளபர், ஜெஸ்மின், பாயிஸா மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும்…

Read More

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழா இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் முஸ்தாக் தலைமையில் இடம் பெற்றது. கலை இளமானி பட்டம், டிப்ளோமாதாரிகள், முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்தோர்களுக்கான பட்டங்களே வழங்கப்பட்டன. துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் தலைவரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்….

Read More

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர்  ரிஷாத் 

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை இன்று (16 ) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்….

Read More