அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல சட்ட வரைபை திருத்த வலியுறுத்து
அரச ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்படும் 9 உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்படுவார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்தியமைக்கப்படவேண்டும். ஹஜ் குழுவுக்கு 7 பேரே நியமிக்கப்படவேண்டும். 7 பேரில் இருவரே அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று மாலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்…
