Headlines

ad34@hFacMC

IS புற்றுநோயை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈராக்

ஐ.எஸ், ஈராக்கின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இஸ்லாம் அரசு என அறிவித்துக் கொண்டனர். ஈராக்கின் குர்திஷ் படையினர் இழந்த பகுதிகளை மீட்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் போராடி வருகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி ஐ.எஸ் களை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த இன்று பாத்தாத் சென்று உள்ளார். இது குறித்து ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபடி கூறியதாவது:- ஐ.எஸ். களுக்கு எதிராக போரிட சர்வதேச சமூகம் ஈராக்கிற்கு உதவ வேண்டும்….

Read More

சிறுமி படுகொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

 (அபூ ஷஹ்மா) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் 9 வயது சிறுமி அயலவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டு பேக் ஒன்றால் கட்டி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இவர் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஜின்னா வீதி, எம்.ஆர்.சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமி என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று (10) புதன்கிழமை பிற்பகல் சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி…

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களை நாடு கடத்துவேன்: ஞானசார தேரர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் நான்கு பேரைத் தவிர மற்ற எல்லோரையும் நாடு கடத்துவேன் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று நடாத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தேவையில்லை எனக் கருதும் அமைச்சர்களை நாடு கடத்துவதற்கு தங்களுக்கு ஒர் அவகாசம் கிடைக்கப் பெற்றால் நீங்கள் எந்த அமைச்சரை முதலில் நாடு கடத்துவீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கே தேரர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், தூர…

Read More

ஜப்பான் மீதான ஈடுபாட்டை ஐ.தே.க வரவேற்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இந்த கருத்தை சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பொருளாதார நிபுணராக விளங்கும் ஹர்ச டி சில்வா, ஜப்பானின் இலங்கைக்கான முதலீடுகள் யாவும் சிறப்பான பயன்களை தருபவையாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இலங்கை சீனாவிடம் பெற்ற கடன்களுக்காக 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. எனினும் ஜப்பானின் முதலீடுகளை பொறுத்தவரையில், அது இலங்கைக்கு நிதியுதவியின் அடிப்படையிலேயே முதலீடுகளை மேற்கொள்வதாக ஹர்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் நீண்டகாலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு…

Read More

ஊவா மாகாண சபைக்கான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய

ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் (செப்டம்பர் மாதம்) 20ஆம் திகதி நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் தேர்தல் கால அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து நேற்று பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே, ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் மொனராகலை மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவாது அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக…

Read More

முஸ்லிம் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த, செய்யித் ஹுசைன் முயற்சி – BBS

தமிழ் பயங்கரவாதத்திற்கு அப்பால் முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும் நியாயப்படுத்தவே ஐ.நாவின் புதிய ஆணையாளர் செய்யித் அல் – ஹுசைன் முயற்சிக்கின்றார். இலங்கையின் நடந்து முடிந்த பழைய விடயங்களை மீண்டும் கிளறிவிட்டு நாட்டை சீரழிக்க வேண்டாம் என பொதுபலசேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பினர் நேற்று கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; ஐக்கிய நாடுகள் மனித…

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின், புதிய நிர்வாகிகள் விபரம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. போரத்தின் வருடாந்த மாநாடு கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி தேசிய நூதனசாலையின் கேட்போட்கூடத்தில் இடபெற்றது. இதன்போது தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே என்.எம்.அமீன், றிப்தி அலி மற்றும் எச்.எம்.பாயிஸ் ஆகியோர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக 18 செயற்குழு உறுப்பினர்களும் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை (08) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்கள் ஏகமனதாக…

Read More

ஐ.நா. விசாரணை நிராகரிப்பு: நிலைப்பாட்டில் மாற்றமில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைகள் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்ற மெதுவும் இல்லை எனத் தெரிவித் துள்ள இலங்கை அரசு, மனித உரி மைப் பாதுகாவலர்கள் பழிவாங்கப்படு கின்றனர் என வெளியான குற்றச் சாட்டுகளையும் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 27 ஆவது அமர்வில் உரையாற்றிய தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள் ளார். புதிய ஆணையாளர் நியமனத்தை வரவேற்றுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் பேச்சுகளை…

Read More

விக்கிக்கு கோட்டா தூது

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்‌ஷ திடீர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசனை இதற்காக அவர் தூது அனுப்பியுள்ளார். வடக்கு மாகாணசபைக்கும்  கொழும்பு அரசுக்கும் இடையிலான முரண்நிலையைத் தீர்ப்பதற்காக வடக்கு முதல்வருடன் யாழிற்கு வந்து பேசவும் தயாராக இருக்கிறார் என்று  பாதுகாப்பு செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து…

Read More

தொடர்ந்து விஷமாகும் உணவு – 12பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் 12 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்ட உணவே  விஷமானதாக காணப்பட்டது தொடர்ந்து உணவு விஷமாகும் சம்பவம் தொடர்பில், அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதற்கு தயாராகிகொண்டிருந்த போது காலவரையரையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை உணவு விஷமானதில் இந்த தொழிற்சாலையில் கடமையாற்றிய தங்காலையை சேர்ந்த பெண்ணொருவர் மரணமடைந்தார். அவருக்கு நட்டஈடு வழங்குமாறும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குமாறும்…

Read More

இலங்கைத் தமிழ் பெண் தீயில் எரிந்து சாவு

திருவண்ணாமலை வந்தவாசி பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீ மூட்டித்  தற்கொலை செய்துள்ளார். என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த முகாமில் வசித்து வந்த பரமேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பெண்ணுக்கும் விழுப்புரம் கீழ்புதுப்பட்டு அகதி முகாமைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த பெண் கணவனை…

Read More

மோதல்களின் மத்தியில் ஈராக்கில் புதிய அரசு பதவியேற்பு

ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில்  ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னி மற்றும் குர்திஷ் இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சராக ஹைதர் அல் அபாதி செயற்படவுள்ளதோடு இப்ராஹிம் ஜபாரி வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார் பல அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு பிறகே ஈராக்கில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கில் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டு வந்த ஸலேஹ்…

Read More