Headlines

ad34@hFacMC

ISIS க்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம், பெரும் முதலாளிகள் மகிழ்ச்சி

(Kalaiyarasan Tha) ஈராக், சிரியாவில் ISIS இயக்கத்தை அழிப்பதற்கான திட்டத்தை ஒபாமா அறிவித்துள்ளார். ஒபாமாவின் “ISIS அழிப்புப் போர்”, அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவும் என்பதால், பெரும் முதலாளிகள், குறிப்பாக எண்ணை வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், கடந்த ஒரு வருடமாக எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பரல் ஒன்று $115 க்கு விற்ற எண்ணை, தற்போது நூறு டாலருக்கு கீழே இறங்கி உள்ளது. ஐரோப்பிய தரத்திலான Brent $99,90; அமெரிக்க தரத்திலான WTI $92,30 என, இறுதியாக…

Read More

பச்சை மிளகாய் சவாலை ஏற்ற ஐ.தே.க. எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சை மிளகாய் சவாலை ஏற்றுக் கொண்டு அதனை செய்து காட்டியுள்ளார். இலங்கையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளைஞர்கள் சிலர் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். “ஐஸ் பக்கட் செலன்ஞ்” திட்டத்திற்கு எதிராக “பச்சை மிளகாய் சாவால்”´ என்ற திட்டத்தை இளைஞர்கள் அறிமுகம் செய்துள்ளார். சவாலின் விதிகள்படி, சவால் விடுக்கப்படும் நபர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டால் 100 ரூபா நிதி உதவி அளிக்க வேண்டும்….

Read More

கோட்டாபய ராஜபக்ஸ, அரசியலுக்கு வருவதற்கு பூரண தகுதியை பெற்றுவிட்டார் – கொழும்பு மேயர் முஸாம்மில்

கோட்டாபய மிகவும் தூர நோக்கோடுதான் தனக்கு நகர அபிவிருத்தி அமைச்சு வேண்டுமென கூறியிருக்கின்றார். அவர் தற்போது அரசியலுக்கு வருவதற்கான மிக முக்கியமான தகுதியை பெற்றுவிட்டார் என கொழும்பு மாநகர மேயர் ஜே.எம் முஸாம்மில் தெரிவித்தார். 450 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கொழும்பு மாநகரசபையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்நிகழ்வு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் புதன்கிழமை (10) மாலை இடம்பெற்றது. அவர்…

Read More

ஜெயாவின் அவதூறு வழக்கு: சுவாமிக்கு அழைப்பாணை

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவா தியாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணி யன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதல் வரை விமர்சித்து ஆங்கில ஜெயாவின் நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்பிரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்….

Read More

விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம் – ரணில்

நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு. ராஜபக்ச விரோத சக்திகளை ஒன்று திரட்டி ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் விவசாயிகள், இளைஞர் யுவதிகள், மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என சமூகத்தின் பல்வேறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சினைகளை…

Read More

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 21பேர் நேற்று இரவு பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை  கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாகை மாவட்ட பூம்புகார் பகுதியினைச் சேர்ட்ந்த இருந்து 70 அடி நீளமான படகில் நேற்று மீன்பிடிக்க வந்த 21 தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். மேலும் அனைவரையும் இன்று பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாங்கள் எல்லை…

Read More

இலங்கையின் சுற்றாடலை இந்திய மீனவர்கள் அழிக்கின்றனர் – ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் இலங்கை கடற் பரப்புக்குள் ஒவ்வொரு நாளும் வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (OU)

Read More

ஐ.எஸ் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி

ஐ.எஸ் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் நாடுகளை இணைத்து தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தோடு போர் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான நடவடிக்கைகளை நேட்டோ நாடுகளுடன் இணைந்து எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற செனட்களின் ஆதரவு இல்லாமல், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஐ.எஸ்-ஸுக்கு எதிரான தாக்குதலில் அதிபர்…

Read More

ஷரியா சட்டம் நாட்டில் இல்லாதபோது, அதனை நீக்க வேண்டுமென்பது முட்டாள்தனமானது – அசாத் சாலி

ஷரியா சட்டம் என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லாதபோது அதற்கு எதிரான கண்டனம் தெரிவித்து அதனை நீக்க வேண்டுமென்று பொதுபலசேனா  கூறுவது முட்டாள் தனமான நகைப்புக்குரிய  விடயமாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். ஷரியா சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் அதனை பற்றிப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. திருடியவர்களின் கையை வெட்டுவதுதான் ஷரியா சட்டம். அது இலங்கையில் உள்ளதா? உண்மையில் ஒவ்வொரு முஸ்லிமும் ஷரியா சட்டத்தினை பின்பற்றித்தான் நடக்க வேண்டும். ஆனால், இலங்கையில்…

Read More

பொதுபல சேனாவுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து சூடான பதில்..!

(விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி) சரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும் என பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்திருக்கிறார். அதுதவிர இங்குள்ள சகல பீடங்களும் சரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுவதாகவும், இங்கு இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாசாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய சரீஆ சட்டப் பிரிவு, இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குவதாகவும்…

Read More

ஷரிஆ சட்டம் இறைவனின் சட்டமல்ல – பொதுபல சேனா

இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளும் இஸ்லாமிய சட்டங்களும் நாட்டில் செயற்படுவது முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். நாட்டில் முஸ்லிம் தீவிரவாதமொன்றினை உருவாக்கும் ஷரி – ஆ சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பொதுபல சேனா பௌத்த அமைப்பு சிங்கள சமூகத்தை சீரழிக்கும் முஸ்லிம் மதவாதத்துக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் எனவும் சுட்டிக்காட்டியது. பொதுபல சேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பு கிருலப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் பணிப்பாளர் டிலந்த…

Read More

இலங்கைக்கு அல்கொய்தாவின் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – இராணுவம் திட்டவட்டம்

தெற்காசிய நாடுகள் சிலவற்றிற்கு அல்-கொய்தா அச்சுறுத்தல் காணப்பட்டாலும் அந்த அமைப்பினால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். தெற்காசிய பிராந்தியத்தில் தமது அமைப்பினை உருவாக்க போவதாக அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒருவர், அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் நிலையில் அந்த அமைப்பின் அச்சுறுத்தல் இலங்கையில் உள்ளதா? ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு கூறினார். தெற்காசிய…

Read More