Headlines

ad34@hFacMC

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணம் உள்ளிட்ட பல்வேறு…

Read More

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்

பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநாட்டு மண்டபத்தில் வாக்குச் சீட்டுக்கள் காணப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மண்டபத்தில் நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, அத்துரலிய ரத்ன தேரர், ராஜித சேனாரத்ன, உள்ளிட்டோர்…

Read More

காலை 7 தொடக்கம் மு.ப 10 மணிக்குள் வாக்களித்துவிடுங்கள்; மனோ

வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலங்களுக்குள் வாக்களிப்பதன் மூலம் எதிர்நோக்க கூடிய தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காலை 7 மணிக்கும் முற்பகல் 10 மணிக்கும் இடையில் உங்கள் அட்டை அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அடையாள ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களியுங்கள். வாக்களிப்பு தொடங்கி முதல் மூன்று மணித்தியாலத்துக்குள் வாக்களிப்பதன்…

Read More

முஸ்லிம் மக்களுக்கான இறுதி அறிவித்தல்…..

எஸ்.அஸ்ரப்கான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்முனையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் உரையாற்றியதை தொகுத்து தருகின்றோம். மரணித்த ஒருவர் மஹ்சரில்தான் எழுப்பப்படுவார் என்பதுதான் எமது நம்பிக்கை. ஆனால் மரணித்தவர்கள் அடிக்கடி எழும்பி வருவதாக எமது நாட்டில் அவ்வப்போது மக்கள் கூறுவதுண்டு. அதுதான் தேர்தல் தினமாகும். தேர்தலில் வாக்களித்துவிட்டு மீண்டும் அவர்கள் சென்று விடுவதாக அடிக்கடிநாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் நமது சாட்டின் வரலாற்றில் மரணித்த ஒருவர் தேர்தலில்…

Read More

ஏமாற்று பேர் வழிகளை நம்பி உரிமையினை இழந்து விட வேண்டாம் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேர்தலில் மக்களை பலவந்தமாக வாக்குகளை பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறுபட்ட பொருட்களை இலஞ்சமாக வழங்கவதற்கு சிலர் செயற்படுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் ,இவ்வாறு பொருட்களை கொடுக்க வரும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு உடன் கொண்டுவருமாறும் கேட்டுக் கொண்டார். மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும். றிஷாத்…

Read More

ஒவ்வொருவரும் 10 வாக்குகளையேனும் மைத்திரிபாலவுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் தேவையாகும் – றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன வுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் மாற்றத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வாக்காளர்களிடம் கேட்டுள்ளார். இன்று நள்ளிரவுடன் நிறைவுறும் இறுதி தேர்தல் பிரசாரத்தினை நிறைவு செய்ய முன்னர் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களிடமும் இந்த வேண்டுகோளைவிடுப்பதாக தெரிவித்துள்ள தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் குறிப்பாக தமிழ் பேசும்,தமிழ்,முஸ்லிம்…

Read More

வடக்கு, கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதை எவராலும் தடுக்கமுடியாது : றிஷாத்

தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் நிரந்தர தீர்வுக்காக ஒன்றுபட்டிருக்கும் நிலையில் அந்த இலக்கு ஒருபோதும் தோல்வியடைந்து விடக்கூடாது எனத் தெரவித்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியூதீன் அந்த இலக்கை அடைவதற்காக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பொன்று…

Read More

மைத்திரி- ரணில் ஒப்பந்தம் போலியானது ; இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரசாங்கத்துக்கு தாவி, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும்…

Read More

மைத்திரியின் சின்னம் ‘அன்னம்’: மக்களை அவதானமாக இருக்குமாறு மனோ கணேசன் கோரிக்கை!

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் சின்னம் அன்னப்பறவையாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்குக் கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி…

Read More

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவர்

போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் கொலையாளிகள் பாலியல் வன்கொடுமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை விதிக்கப்படும். எதிர்வரும் 11ம் திகதி இந்தக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். புதிய அரசாங்கத்தின் கீழ் தூய்மையான…

Read More

மைத்திரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்! பொலிஸ் மா அதிபரிடம் கோரும் அமைச்சர்

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. அரசாங்கம் எந்த தேர்தல் வன்முறை செயல்களையும் அனுமதிக்காது எனவும் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இரத்தினபுரியில் இன்று அதிகாலை மைத்திரிக்கான மேடை மீது துப்பாக்கி சூடு!

பொதுவேட்பாளர் மைத்திரிபாலி சிறிசேனவின் கூட்டம் ஒன்று இன்று காவத்தையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு மேடை அமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இன்று அதிகாலை 1.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read More