Headlines

ad34@hFacMC

துறைமுக இரகசிய தகவல்களை காணவில்லை!

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியல்; பந்து விக்ரமவின் பொறுப்பின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து இரகசியத் தகவல்கள் உள்ளடங்கிய கணனி ஹாட்டிஸ்க் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனுள் இலங்கையின் அனைத்து துறைமுகங்களுக்கும் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரகசியத் தகவல்கள் அத்துடன் ஹம்மாந்தோட்டை துறைமுகம் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலேயே தோற்றுள்ளேன்: மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து அளிக்கப்பட்ட வாக்குகளினாலேயே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதனைத் தவிர்த்து, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமையே தன்னுடைய சொந்தக் கிராமமான அம்பாந்தோட்டையின் மெதமுலனவிற்கு சென்றார். அங்கு, கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!

நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே வீசா பெறத் தேவையில்லை. வீசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த…

Read More

மைத்திரிபாலவுக்கு ஒபாமா வாழ்த்து

இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு – நம்பிக்கையாகவும் உள்ளது. அத்துடன் வெற்றிகரமான – அமைதியான தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பிரதியமைச்சர் ஜெயசேகர கைது

எரிபொருள் மற்றும் மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். தேர்தல் பரப்புரையின் போது எதிரணியின் ஆதரவாளர்கள் மீது கஹவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பெல்மடுள்ளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் கடந்த 5ம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை

எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல – நியுபேர்க் – நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தி இருந்தனர். இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று…

Read More

புதிய ஜனாதிபதி செயலாளர் – பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதியின் புதிய செயலாளராக தற்பொழுது பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அபயக்கோன் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிகக்பட உள்ளார். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளாராக சுற்றாடல்த்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் பஸ்நாயக்க நியமிகக்ப்பட உள்ளார்.

Read More

சிறுபான்மை மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும் – றிஷாத் பதியுதீன்

அஸ்ரப் ஏ சமத் பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள்…

Read More

வெற்றிக்களிப்பு

வெற்றிக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க…

Read More

றிஷாத் பதியுதீன் மற்றும் ஹக்கீமுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால

முன்னாள் அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும்    ஹக்கீமுக்கு ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிநேசன நன்றி தெரிவித்துள்ளார்.சுதந்திர சதுக்கத்திலிருந்து தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க்ண்டநன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Read More

யார் இந்த மைத்திரி ?

பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951ஆம் ஆண்டுஇ செப்டெம்பர் 3ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்தி ரிபால சிரிசேன விவசாயத்துறையில் நாட்டம் இருந்தமையால் 1973ஆம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார். அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத் தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார். மாணவர் பருவத்தி லேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர்…

Read More

சரிந்தது மஹிந்த அரசு!

இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். கடந்த கால அராஜக ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். அம்பாந்தோட்டையில் பிறந்த மஹிந்த ராஜபக்ச தனது தந்தையாரின் அரசியல் வழியிலேயே தானும் அரசியலில் நுழைந்தவர். 1970 ஆம் ஆண்டு சுதந்திரக்…

Read More