Headlines

ad34@hFacMC

பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, சமுா்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாகிஸ்தான் நாட்டின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Read More

மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுமார் ஒரு மணித்தியாலமாக நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒருசில கொலை சம்பவங்கள் குறித்து தாம் அறிந்திருப்பதாக அண்மையில் ஊடகங்கள் வாயிலாக மேர்வின் சில்வா கூறிய கருத்துகளின் பிரகாரம் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். முன்னாள் அமைச்சரிடம், அவர் அறிந்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Read More

உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது.

எம்.எம்.ஜபீர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபக தலைவர் மறைந்த மனிதர் மர்ஹூம் எம்.எம்.எச்.அஷ்ரப் அவர்களினால் 1996 ஆம் ஆண்டு புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படாமலுள்ள தபாலக கட்டிடத்தில் உப தபாலகம்…

Read More

மேற்குலகில் தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது

தொழில்மயமான நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது சதவீதத்தால் அதிகரித்து எட்டு லட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.சிரியாவிலும் இராக்கிலும் நடந்துரும் மோதலே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என அகதிகள் நலனுக்கான ஐநா அமைப்பு கூறுகிறது. துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பல லட்சம் பேர் ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.மேற்குலக நாடுகள் கூடுதலான அகதிகளுக்கு அடைக்கலம் தர வேண்டும் என யு என் ஹெச் சி ஆர்…

Read More

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது. இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக நசுரா என்றும் அவர் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார். தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன் பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார். அத்துடன் சில…

Read More

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் – பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் நேற்று 26/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா (Thaj samudra) ஹோட்டலில் நடைபெற்றது, இதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு

இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு நேற்று (26/03/2015) அன்று ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 40 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் ஏற்றுமதியில் நிறுவனங்கள் எதிரநோக்கும் பல பிரச்சினைகளை முன்வைத்தனர். அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக சம்மந்தப்பட்ட சகல திணைக்களம், அமைச்சுக்களின் பிரதாணிகளும் கலந்துகொண்டதுடன் ஏற்றுமதியாளர்களின் சுமார் 50க்கு மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுவழங்கப்பட்டது. இதில் ஏற்றுமதி அதிகார சபை தலைவர் உற்பட…

Read More

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் மற்றும் வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு

முனவ்வர் காதர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் உடனான சந்திப்பு ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் நடைபெற்றது. இதில், 2014 ஆம் ஆண்டு செனுவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வியாபார உடன்படிக்கைக்குப்பிறகு வர்த்தகத்தை 1பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்துவதற்கான முதலாவது சந்திப்பாகும் இதில். வியட்னாமுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளது என்பதனை தூதுக்குழு தெரிவித்தது. வியட்னாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கூறுகையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான வர்த்த ஒப்பந்தங்கள்…

Read More

விபத்துக்களற்ற நாடு ; நாடளாவிய வேலைத்திட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் 26 இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய…

Read More

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானால் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும் -ஹசன் அலி

கூட்டுக் கட்­சி­களின் தேசிய அர­சாங்­கத்தில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக வேண்டும். நிலவி வரும் அர­சியல் சூழ்­நி­லைக்கு அமைய சம்­பந்தன் மட்­டுமே எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலை­வ­ராக்­கினால் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கி ஆத­ரிப்­ப­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.தேசிய அர­சாங்­கத்தின் கூட்­டணி ஆட்­சியில் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்கும் நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்­டினை வின­விய போதே…

Read More

அஸ்ரப் விட்டுச் சென்றதை அமைச்சர் றிஷாத் பதியுதீன் செய்துவருகின்றார் -சுபைர்

இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் சாரி சாரியாக இன்று இணைந்து கொண்டிருப்பது மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் சேர் அவர்களின் அரசியல் விழுதாக செயற்படும் அமைச்சரும்,எமது கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீனின் அரசியல் செயற்பாடுகளை கண்டு…

Read More

திங்கள் முதல் இலவச WI-FI அமுல்

எதிர்வரும் திங்கட்கிழமை மு தல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக நிறுவன பிரதானிகளை இன்று வியாழக்கிமை சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

Read More