25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்றிரவு 7.40 மணி முதல் ஆரம்பம். 25 வருடங்களின் பின் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 25 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த இலங்கைக்கு விஜயத்தின் போது தலைமன்னார் வரையான ரயில் பாதையை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
