Headlines

ad34@hFacMC

45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்

துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை 1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ ஜூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது.இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு…

Read More

கிழக்கிலங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு

அட்­டா­ளைச்­சேனை, கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மாடிக் ­கட்­டி­டத்­தி­ல் பாது­காப்பு முறை­மை­யினை மேற்­கொள்­ளு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீத­வா­னு­மா­கிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று கல்­லூரி நிரு­வா­கத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்தார். இக்­கல்­லூ­ரியின் 03ஆம் வரு­ட­ மா­ண­வ­னா­கிய ஜே.றவூஸ்டீன் வயது (16) கடந்த பெப்­ப­ர­வரி மாதம் 13ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை 03ஆவது மாடி­யி­லி­ருந்து விழுந்து மரணமடைந்தார். இத­னை­ய­டுத்து அக்­க­ரைப்­பற்று பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­யை­ய­டுத்து இக்­கல்­லூ­ரியின் மாடிக்­கட்­டிடத்தின் வெளிப்­ப­குதி அங்­கி­ருந்த மாண­வர்­களின் பாது­காப்­புக்கு உகந்­த­வை­யாக அமை­யா­தி­ருந்­தமை பற்றி…

Read More

விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்

விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு. ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது. விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை…

Read More

உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார். இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும்…

Read More

பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்

இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடு­பட்டும் பொரு­ளா­தார நிலையில் இன்னும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளது. ஒன்­று­பட்ட நாட்­டினுள் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினை வென்­றெ­டுக்க வேண்­டு ­மாயின் அனைத்து கட்­சி­க­ளி­னதும் புரிந்­து­ணர்வும் ஒற்­று­மையும் அவ­சியம் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்­னரும் அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்­கத்­தி­னையே கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிர­தமர் தெரி­வித்தார்.சக்­தி­யினால் வலுப்­பெறும் இலங்கை எனும் தொனிப்­பொ­ருளில் மின்­சக்தி, எரி­சக்தி அமைச்­சினால்…

Read More

50 கிலோ சீமெந்து மூடை 870 ரூபா! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த நிர்ணய விலைக்கு சீமெந்து விற்பனை செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் யாழ் வருகை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்  இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகைதந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இக்குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் மதியம் சந்தித்து முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரணிலிடம் அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இல்லை: அனுர குமார

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கான அதிகாரம் அதிகரிப்பது எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்திலே என அவர் மேலும் கூறியுள்ளார். அதுவரை இவ் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதனை பறித்துக் கொள்ள முடியாதெனவும் அவ்வாறு கூறுவது முற்றிலும் பொய்யான ஒரு விடயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சையில் சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரி மாணவர்கள்

மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார் நேற்று வெளி­யான க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பெற்­றி­ன­டிப்­ப­டையில் சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஆறு மாணவர்கள் 9பாடங்­க­ளிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்­துள்­ளனர். சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஜே.எம்.எம்.ஷிகான் நஜீ­லா ­சிம்றா எம்­. எம். எவ். றசான் எ.சி.ஷமா­அப்றின் எம்.ஆர்.ஹன்சா எம்.எம்.எவ்.ஷிறாபா ஆகிய 06 மாணவர்கள் 9ஏ சித்­தி­பெற்­றுள்­ள­தாக அதிபர் எச்.எம்.பாறூக் தெரி­வித்துள்ளார். 9ஏ சித்தி பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த குறித்த ஆறு மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன….

Read More