Headlines

ad34@hFacMC

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில் பலர் படுகொலை

வெள்ளை வானில் கடத்தப்பட்ட வர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் கிரித்தலே இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயங்கி வந்த சித்திரவதை மற்றும் கொலை முகாமில் கடுமை யாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வெளியிடங்களில் உள்ள கல்லறைகளில் மேல் பாகம் திறக்கப்பட்டு அந்த கல்லறைகளுக்குள் மறைத்து வைக்கப்…

Read More

நீதிமன்றம் செல்லும் தேர்தல்கள் ஆணையாளர்!

நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார காலத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பாக சுமார் 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனை…

Read More

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை த.தே.கூ. துரிதப்படுத்த வேண்டும்

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த வாழிடங்களில் மீளக்குடியமர்ந்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சொந்த வாழிடங்களில் குடியமர்த்த முன்னர் வடக்கு, கிழக்கு இணைப்பு, குறித்து பேசுவது அர்த்தபூர்வமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் தனிமாகாணம் போன்ற கதைகள் ஜனவரி 8ம் திகதியும்…

Read More

ஜனாதிபதிக்கும் முன்னணி கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று காலை  இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய…

Read More

பாலித்த தேவரப் பெருமவின் புதல்வர் உயிரிழந்தார்

அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது முஸ்லிம்களுக்காக போராடியவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  பாலித்த தேவரப் பெரும அவர்களின் புதல்வர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. 25 வயது ஷான் தேவரப் பெரும என அறியப்படும் இவர் கடந்த சில காலமாக சுகயீனமாக இருந்து வந்ததுடன் நேற்று  மாலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகிறது. இலங்கை முஸ்லிம்களின் சகோதரகாக வாழ்ந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்  பாலித்த தேவரப் பெரும அவர்களுக்கு acmc.lk வாசகர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் விசமப்பிரசாரம் பலிக்கவில்லை : தயா கமகே

பொதுத் தேர்­த­லுக்கு முன்­தினம் கூட என்னை ஒரு சிங்­க­ள­வ­ரென்றும், முஸ்­லிம்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­கக்­கூ­டா­தெ­னவும் முஸ்லிம் காங்­கிரஸ் விச­மப்­பி­ர­சாரம் செய்தும் கணி­ச­மான முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இத்த மக்­க­ளுக்கு பெரு­நன்றி தெரி­விக்க நான் கட­மைப்­பட்­டுள்­ளேன் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும், திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா கமகே கூறினார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிந்­தவூர் மத்­தி­ய­குழு அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு நன்றி பகரும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ஐக்­கிய…

Read More

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று  ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும்…

Read More

பொதுபலசேனாவின் மன்னிப்புக் கோரிக்கை நிராகரிப்பு

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம் கொண்டு அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தனர். அரசாங்க உயர்மட்டமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் அவர்களின் அத்துமீறல்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில் இனவாத பொதுபலசேனாவின் செயற்பாடுகளை கண்டித்த வட்டரெக விஜித தேரரை ஒளித்து வைத்திருப்பதாக கூறி பொது பல சேனாவினர், றிஷாத் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தினுள் புகுந்து அடாவடித்தனம்…

Read More

வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கு மிக அதிக வாய்ப்பு காணப்பட்டது. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஆர்வத்துடன் வாக்களித்திருப்பின் மூவரும் வெற்றி பெற்று கடந்த 26 வருடங்களாக எம்.பி ஒருவர் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலை மாறி நீங்கள் எல்லோரும் இன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். எனினும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்வோம். இத்தேர்தலில் நாடு பூராகவும் முஸ்லிம்களும்…

Read More

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராட உயிர்பெற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்

முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும். மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும்…

Read More

1000 பேரை இஸ்லாத்தில் இணைத்த மாணவி

பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் செய்து வரும் பழக்கங்கள் இவருக்கு வித்தியாசமாக படவே இஸ்லாத்தை அறிவதில் ஆர்வம் கொண்டார். இஸ்லாமிய தோழிகள் மூலமாக அவருக்கு குர்ஆன் மொழி பெயர்ப்பு கிடைத்தது. குர்ஆனை ஆழ்ந்து படித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்லாமிக் சென்டருக்கு அடிக்கடி போய் வந்தார். இஸ்லாம் இந்த இள நங்கையை ஆட் கொண்டது. கலிமா மொழிந்து ஏக…

Read More

உருவாகும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 10 முஸ்லிம் அமைச்சர்கள்

தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள்…

Read More