Headlines

ad34@hFacMC

பொருட்களின் விலைகள் குறையும் சாத்தியம்

சீன சந்தையின் வீழ்ச்சியினாலும் எரிபொருளுக்கான கேள்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியினாலும் இலங்கையில் பெரும்பாலான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளபோதும் இலங்கைச் சந்தையில் ஓரளவு விலைக்குறைப்பையே பால்மாவிற்கு மேற்கொள்ள முடியுமென நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபை அலுவலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.கே. ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.(tkl)

Read More

ஜனாதிபதியின் 64ஆவது பிறந்ததினம் இன்று!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்த தினம் இன்றாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்றும் இன்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் நடந்தவண்ணமுள்ளன. ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நேற்று இரவு (02) சோமாவதி தூபியின் முன்னால் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது. கப்றுக் பூஜை மற்றும் கிரி ஆஹார பூஜை என்பன இன்றுகாலை நடைபெறுகின்றன. மேலும் பொலன்னறுவை கல்விஹாரையின் ரன்கொத் விஹாரையின் முன்னால் மற்றுமொரு பிரித் ஓதும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதேவேளை, பழுகஸ்கமனவில் உள்ள கத்தோலிக்க…

Read More

JVPயின் எஸ்.மாயாதுன்னே தனது பா.உ. பதவியை ராஜினாமா!

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.மாயாதுன்னே பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். முன்னாள் கணக்காய்வாளரான மாயாதுன்னே, இன்று (03) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவதாக  தெரிவித்தார். மாயாதுன்னே பதவி விலகியதும் அவ்விடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த அல்லது வசந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜினாமா செய்வதும் செய்யாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் என…

Read More

சென்ற முறை பாரா­ளு­மன்­றத்தில் 19 முஸ்லிம் உறுப்­பி­னர்கள்.. இம்முறை 15 பேர்தான்

எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள புதிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விழிப்­பூட்டும் செயற்­றிட்­டத்­தினை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மேற்­கொள்ள வேண்டும் என அம்­பாறை மாவட்ட உலமா சபையின் முன்னாள் செய­லா­ளரும், அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை விரி­வு­ரை­யா­ள­ரு­மான அஷ்­ஷெய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார். எட்டு விட­யங்­களை உள்­ள­டக்கி, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர், செய­லா­ளரை விளித்து எழு­தப்­பட்­டுள்ள அவ­ரது கோரிக்கைக் கடி­தத்தின் பிர­திகள் தேசிய ஷுரா கவுன்சில், கிழக்கு முஸ்லிம் கல்விப்…

Read More

எதிர்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமனம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 8ஆவது  பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஆர். சம்பந்தன் சபாநாயகர் கரு  ஜயசூர்ய அவர்களால்  நியமிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

Read More

தாஜுடீன் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை!

ரகர் வீரர் வசிம் தாஜுடீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறித்த வாகனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனமே இவ்வாறு நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, இவ் வாகன மாதிரி தங்கள் நிறுவனத்தின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்ய முடியொதென குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் இறக்குமதியாளர்கள் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் இவ் வாகன…

Read More

ஹுனுபிட்டிய பள்ளிவாசலில் சமயக் கடமைகளை தொடரலாம் : நீதிமன்றம் அனுமதியளிப்பு

திப்­பிட்­டி­கொட, ஹுனு­பிட்­டிய மொஹி­யத்தீன் பள்­ளி­வா­சலில் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த அனைத்து சமயக் கட­மை­க­ளையும் இடை­யூ­றுகள் எது­வு­மின்றி நடத்­து­வ­தற்கு கட­வத்தை நீதிவான் நீதி­மன்ற நீதவான் நேற்று உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் கிரி­பத்­கொட பொலி­ஸினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்­கினை நிரா­க­ரித்தார். இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த சமய கட­மை­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஹுனு­பிட்­டிய மொஹி­யதீன் பள்­ளி­வா­சலின் மேல்­மாடி சட்ட விரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இது ஒரு மத்­ர­ஸா­வே­யன்றி பள்­ளி­வாசல் அல்ல. அதனால் சமயக் கடை­மை­களைத் தொடர முடி­யா­தெ­னவும் இது…

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி குறித்து தற்போது பல யூகங்கள் எழ தொடங்கி விட்டன. இந்த நிலையில் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ பொலிக் கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது…

Read More

இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம்…

Read More

மக்களின் கோபங்களையும் சபையில் பிரதிபலிப்போம்

தமிழ் முற்­போக்கு முன்­ன­ணியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்­துள்ள ஆறுபேரைக் கொண்ட நாம் எமது மக்­களின் மகிழ்ச்­சி­யையும் துன்ப துய­ரங்­க­ளையும் கண்ணீர் சிந்தும்விட­யங்­க­ளையும் இந்தப் பாரா­ளுமன்­றத்தில் வெளிப்­ப­டுத்து­வதைப் போன்றே எமது மக்­களின் கோபங்­க­ளையும் சபையில் பிர­தி­ப­லிப்போம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மனோ கணேசன் தெரி­வித்தார். புதிய பாரா­ளு­மன்­றத்தின் நேற்­றைய சம்­பி­ர­தாய நிகழ்வின் போது கட்சித் தலை­வர்கள் உரைகள் இடம்­பெற்­றன.இதில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி சார்பில் அதன் தலைவர் என்ற வகையில் உரை­யாற்­று­கை­யி­லேயே மனோ கணேசன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மனோ கணேசன் இங்கு மேலும்…

Read More

வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம்…

Read More