முஸ்லிம் என்பதால் கைதுசெய்யப்பட்ட 14 வயது மாணவன்
அமெரிக்காவில் டெக்ஸாஸ் இர்விங்கில் வசிக்கும் அகமது முகமது.. 14 வயதுச் சிறுவன். அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். எலெக்ட்ரானிப் பொருட்களை புதிது புதிதாக வடிவமைப்பது அவனுடைய பொழுது போக்கு. கடந்த திங்கள் கிழமையன்று தான் லேட்டஸ்டாக வடிவமைத்த எலெக்ட்ரானிக்ஸ் கடிகாரம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறான் அகமது. அவனது வகுப்பாசிரியரிடம் சென்று காட்டியவுடன், “நன்றாக இருக்கிறது. ஆனால் வேறு யாரிடமும் இதைக் காட்ட வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு…
