பரிந்துரைகள் பாரதூரமானதாக அமையாது பிரதி வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையில் பாரதூரமான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் பரிந்துரைகள் பாரதூரமாக அமையாது. பாரதூரமான அத்துமீறல் விசாரணைகள் வலியுறுத்தப்படமாட்டாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிய உள்ளக விசாரணைகளை பலப்படுத்தி அதனூடாக சந்தேகங்களை தீர்க்க அரசாங்கம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை மீதான விசாரணை அறிக்கை பாரதூரமான வகையில் அமையும் என…
