Headlines

ad34@hFacMC

தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இல்லியாஸ் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட உயர்பீட உறுப்பினரும், அக்குரணை அமைப்பாளருமான ஐ.எம்.இல்லியாஸ், தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், அவருக்கான நியமனக் கடிதம், நேற்று (04) வழங்கி வைக்கப்பட்டது.. கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இல்லியாஸ் அவர்கள், நீண்டகாலமாக சமூகத்துக்காக பல்வேறு வழிகளிலும் சேவையாற்றி வருகிறார். இவர் ரோயல் கெயார் வைத்தியசாலையின்…

Read More

பொத்துவில் அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பொத்துவில் அல்/ஹிஜ்ரா வித்தியாலத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் பிரதம அதியாகவும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மெளலவி AM.ரஹ்மதுல்லாஹ், உபவலயக் கல்விப் பணிப்பாளர் N. வஹாப், கோட்டக்கல்விப் பணிப்பாளர் MAM. புஹாரி ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கட்சியின்…

Read More

“வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

“வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மன்னார், மடு, தம்மனைக்குளத்தில் இன்று (05) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.  இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, மகிந்த அமரவீர, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், ஸ்ரீயானி…

Read More

“ஜனநாயக உரிமையை தந்த நல்லாட்சி அரசு புத்தளம் மக்களின் உரிமையில் கைவைக்க முற்படக்கூடாது” நகர சபை அமர்வில் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள்!

புத்தளம் நகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (04) புத்தளம் நகர சபைத்தலைவர் அப்துல் பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கு எதிரான பிரேரனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது. நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம் இங்கு உறையாற்றுகையில், 1963 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட அருவைக்கல்லு சீமெந்து தொழிற்சாலை வேலைத்திட்டம், 1969க்கு பிறகு பெரும் காடாக காணப்பட்ட அருவைக்கல்லு பிரதேசத்தில்…

Read More

“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நகரசபை மைதானத்தில் இன்று காலை (05) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் இடம்பெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த…

Read More

நல்லாட்சி அரசில் ஊடகங்களுக்கு சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளமையால் ஊடகவியலாளர்கள் மௌனித்திருக்க வேண்டிய அவசியமில்லை” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்களே சுதந்திரமாக செயற்பட முடியும் மௌனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண இலங்கை வங்கிக்கான காரியாலயமும் திருகோணமலை மேற்தரக் கிளையின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தையும் நேற்று முன்தினம் (03) திருகோணமலையில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

“15 வருட கால அரசியலில் செய்யமுடியாத அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் ரிஷாட் அவர்களோடு கைகோர்த்த 07 மாதங்களுக்குள் செய்ய முடிந்துள்ளது”- தவிசாளர் தாஹிர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் நாம் கைகோர்த்து 07 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நமது ஊர்மக்களுக்காக கோடி ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், பலகோடி பெறுமதியான அபிவிருத்தித் திடங்களுக்கான முன்மொழிவுகளை எம்மிடமிருந்து கேட்டுப்பெற்று அதற்கான நிதிஒதுக்கீடுகளையும் செய்து தந்திருக்கின்றார் எனவும்  அத்துடன் 02வது கட்டமாக சுமார் 1000 க்கும் அதிகமான தேவையுடைய மக்களுக்காக, வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

முசலி பிரதேச சபையின் 8 ஆவது அமர்வில் எதிரொலித்த புத்தளம் குப்பை விவகாரம்!!!!

முசலி பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு  தவிசாளர் சுபியான் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு. 1.வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் இன்னும் அம்மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தியடையாமை. 2.முசலி மக்களை அரவணைத்துள்ள புத்தளத்தில் குப்பைகளைக்  கொட்டுவதற்கு எதிர்ப்பும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1990 இல் புலிகளால்  வெளியேற்றப்பட்ட முசலி முஸ்லிம்களுக்கு புத்தளம் தஞ்சமளித்தமைக்காகவும் இன்னும் தொடர்ந்து முசலி முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் புத்தளத்தில் வாழ்ந்து வருவதாலும் புத்தளத்தில்…

Read More

“சமூக சிந்தனை சிற்பிகளை கட்சி வேற்றுமைகளை களைந்து அழைக்கிறேன்” மக்கள் காங்கிரஸின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளராக என்னை நியமித்த கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் தவிசாளர் அமீர்அலி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த ஜவாத் அப்துர் ரஸ்ஸாக், தனக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்….

Read More

பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மக்கோனை பாடசாலைக்கு விஜயம்!

மக்கோனை ஸ்ரீ ஸம்புத்தராஜா வித்தியாலய அதிபரது வேண்டுகோளை ஏற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்று (04) பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இப்பாடசாலையானது 30% சிங்கள மாணவர்களையும் 70% முஸ்லிம் மாணவர்களையும் கொண்டியங்கக் கூடிய இந்தப் பாடசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அதிபரால் ஹஸீப் மரிக்காரிடம் முன்வைக்கப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப், இது தொடர்பில் கலந்தாலோசித்து விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், பாடசாலையின்…

Read More

புதுகுடியிருப்பு முஸ்லிம் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட புதுகுடியிருப்பு வட்டாரத்தின், மன்/புதுகுடியிருப்பு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது. அத்துடன், கடந்த ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் இன்று அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச…

Read More

அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டில் அழகுபடுத்தப்பட்ட தலைமன்னார் கடற்கரை பூங்கா நேற்று (03) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் இம்மானுவேல் அமரதுங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு மற்றும் பாராளுமன்ற…

Read More