சியம்பலாங்கமுவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!
சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே கல்நேவ பிரதேச சபைக்குட்பட்ட சியம்பலாங்கமுவ கிராமம். இக் கிராம மக்கள் பல வருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்த அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக, கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்நேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ்…
