Headlines

கடைசி அலுவலகத்தையும் மூடுகிறது யாஹூ




மற்ற உலகளாவிய இணைய நிறுவனங்களைப் போலவே யாஹூவும் சீன உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

அலுவலகம் மூடப்படுவதால் யாஹூவின் சீனப் பிரிவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் வேலையிழக்கவுள்ளனர்.

சீனாவில் மின்னஞ்சல் சேவை வழங்குவதை 2013ஆம் ஆண்டே யாஹூ நிறுத்தியிருந்தது.

தங்களது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கை இது என்றும், கூடுதலான ஒத்துழைப்புக்காகவும் புதுமையைப் புகுத்துவதற்காகவும் இது மேற்கொள்ளப்படுகிறது என்றும் யாஹூவின் அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *