Headlines

முஸ்லிம் மீடியா போரம் கண்டியில் நடத்தும் ஊடகக் கருத்தரங்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப்பொருளிலான  உயர் வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது. கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூட்டத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கு மத்திய மாகாண சபை முதலமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நூறு மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக போரத்தின் கண்டி மாவட்ட இணைப்பாளர்…

Read More

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது

வனாத்தவில்லு – போம்பரிப்பு பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 8 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியை  தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Read More

அரசியல்வாதிகளுக்கு மதுசார விற்பனை அனுமதிப்பத்திரங்கள் இல்லை! பிரதமர் ஆப்பு

மது­சார உற்­பத்தி மற்றும் விற்­பனை நிலை­யங்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் இனி­வரும் காலங்­களில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. தேவை­யேற்­படின் வழங்­கப்­பட்­டுள்ள அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் தொடர்பில் மேல­தி­க­மான வரி­களை விதித்து அவற்றை மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்­வின்­போது வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் அனு­ர­கு­மார திசா­நா­யக்க எம்.பி.யினால் எழுப்­பப்­பட்ட இடைக் கேள்­வி­யொன்­றுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். முன்­ன­தாக கேள்­வி­யெ­ழுப்­பிய ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யான அனு­ர­கு­மார திசா­நா­யக்க கூறு­கையில்,…

Read More

நீரில் மூழ்கி சிறுவன் பலி

தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் ஆணமடு – பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வன்கொடுமைத் தடயங்கள் சிறுமியில் காணப்படுகின்றன; சட்ட வைத்திய அறிக்கை

வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் இருப்பதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சிறுவர் நன்னடத்தைப் பிரிவு கொழும்பு தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் திகதி தொண்டையில் நீர் இறங்கவில்லை என்று தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். ஆனால் சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அக்கிரா மத்தை சேர்ந்த மாதர்சங்கத்தினர்,…

Read More

பொதுபல சேனா இரகசிய கூட்டம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் முக்கிய பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று காலை தியவன்னா தியத்த பூங்காவில் நடைபெற்றுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேவும் இக் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.

Read More

யாழ். உஸ்மானியா கல்லூரி கட்டடம் அமைச்சர் றிஷாதினால் திறந்து வைப்பு (photos)

யாழ்ப்பாணத்தில் 1956ஆம் ஆண்டு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டது அப்போது ஒன்று சேர்ந்த மக்கள் 1958 ஆம் கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தனர். 1963 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதினால் இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. 1990 அம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதரன சூழலினால் மக்கள் இடம்பெயர்ந்ததனால் இங்குள்ள மாணவர்களின் தொகை குறைந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பாடசாலை மீண்டும் இயங்க துவங்கியது.தற்போது இந்த பாடசாலை உயர் தர…

Read More

கடைசி அலுவலகத்தையும் மூடுகிறது யாஹூ

மற்ற உலகளாவிய இணைய நிறுவனங்களைப் போலவே யாஹூவும் சீன உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. அலுவலகம் மூடப்படுவதால் யாஹூவின் சீனப் பிரிவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் வேலையிழக்கவுள்ளனர். சீனாவில் மின்னஞ்சல் சேவை வழங்குவதை 2013ஆம் ஆண்டே யாஹூ நிறுத்தியிருந்தது. தங்களது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கை இது என்றும், கூடுதலான ஒத்துழைப்புக்காகவும் புதுமையைப் புகுத்துவதற்காகவும் இது மேற்கொள்ளப்படுகிறது என்றும் யாஹூவின் அறிக்கை கூறுகிறது.

Read More

உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்க தெளிவான அறிக்கை வேண்டும்: ஜனாதிபதி செயலகம்

சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான தெளிவான  அறிக்கையொன்றை  சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கடவுச்சீட்டு பெறுவதற்கு இனி கைவிரல் அடையாளம் தேவை

கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் குடிவரவு  குடியகல்வு திணைக்கள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை  அனுமதியளித்துள்ளது.  இதற்கிணங்கள 1948/ 20 ஆம் இலக்க குடிவரவு  குடியகல்வு சட்டத்தில் கடவுச்சீட்டுகளை  வழங்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களைப்  பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக  சமர்ப்பிப்பதற்காக சமாதானம் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கே அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போதைப்பொருள்…

Read More

முஸ்லிம்களை சித்தரவதை செய்தவர்களுக்கு சவுதி அரேபியாவை விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை

சவுதி அரேபியாவின் முக்கிய அமீர்களில் ஒருவரான அமீர் துருக்கி பின் பைஸல் நேற்றைய தினம் C.N.N. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்கு உலகையும் சுவீடனையும் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். சிறை என்ற பெயரில் குவாண்டனாமோ மற்றும் அபுகரீப் போன்ற சித்திரவதை கூடங்களை நிறுவி பல நுற்றுக்கணக்கான முஸ்லிம்களை சித்தரவதை செய்த நாடுகளுக்கும் அந்த நாடுகளுக்கு துணையாக நின்ற நாடுகளுக்கும் இஸ்லாத்தையோ சவுதி அரேபியாவையோ விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும் இஸ்லாம் மனித உரிமைகளை மதிக்கும் மார்க்கம்…

Read More

புதிய கட்டுப்பாட்டு விலை: பால்தேநீர் – 25/= தேனீர் – 10/= அப்பம் – 10/=

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகிய மூன்றிற்கும் நுகர்வோர் அதிகார சபை விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி பால்தேனீர் 25 ரூபாவும் தேநீர் 10 ரூபாவுக்கும் அப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்பட வேண்டுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Read More