Headlines

முஸ்லிம்களை சித்தரவதை செய்தவர்களுக்கு சவுதி அரேபியாவை விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை




சவுதி அரேபியாவின் முக்கிய அமீர்களில் ஒருவரான அமீர் துருக்கி பின் பைஸல் நேற்றைய தினம் C.N.N. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்கு உலகையும் சுவீடனையும் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார்.

சிறை என்ற பெயரில் குவாண்டனாமோ மற்றும் அபுகரீப் போன்ற சித்திரவதை கூடங்களை நிறுவி பல நுற்றுக்கணக்கான முஸ்லிம்களை சித்தரவதை செய்த நாடுகளுக்கும் அந்த நாடுகளுக்கு துணையாக நின்ற நாடுகளுக்கும் இஸ்லாத்தையோ சவுதி அரேபியாவையோ விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும் இஸ்லாம் மனித உரிமைகளை மதிக்கும் மார்க்கம் என்றும் தனது வலுவான வாதத்தை எடுத்து வைத்தார்.

மனித உரிமை என்ற பெயரில் கொலையாளிகளையும் கொள்ளைகாரர்களையும் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்க கூடியவர்களையும் தண்டிக்க கூடாது என கூறுவது அறியாமையின் அடையாளமாகும் என்றும், மேற்கு உலகை இன்னும் அறியாமை என்னும் இருள் சூழ்திருப்பதாகவும், இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை நோக்கி அவர்கள் வரும் போது இஸ்லாமிய சட்டங்களில் உண்டான நியாயங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *