Headlines

மறுத்தது இந்தியா, கொடுத்தது சீனா




இந்தியாவில் மருத்துவ கல்வியைத் தொடர தடைவிதிக்கப்பட்ட அகதி மாணவி நந்தினிக்கு சீனாவின் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் (பிளஸ் – 2) சித்தியெய்தி மருத்துவ கல்விக்குத் தெரிவானார்.

இருப்பினும் இந்திய மருத்துவ சபையின்  சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கற்க முடியாது,என்பதனால் பொறியியல் கல்வியைக் கற்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

இந்தநிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து, அவர்களைக் குடும்பத்துடன் இலங்கைக்குத் திருப்பி அழைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சீனாவில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் குறித்த நிறுவனத்தின் உதவியுடன் மருத்துவ கல்வியைக் கற்று வருகின்றார் நந்தினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *