Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வவுனியா பிரதேசத்தின் வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.  அந்த வகையில், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி, ஆசிரியர் உபைதுல்லா ஆகியோர் இன்று (07) அங்கு விஜயம் செய்து வீதி செப்பனிடும் பணிகளை பார்வையிட்டனர்.

அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல் காபட் இடப்பட்டுள்ள வவுனியா பாரதிபுரம் வீதியையும் இவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

-சைபுதீன் எம். முஹம்மட்-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *