Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசின் பேரில், அமைச்சரினால் ரூபாய் 78,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலையின் மின்சுற்று வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மின் விசிறிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *