Headlines

உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர், அமைச்சர் ரிஷாத்தை சந்திப்பு




-ஊடகப்பிரிவு-

உலகளாவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச் செயலாளர் ரொபின் மார்ஷ் மற்றும் உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய  சமாதானத்துக்கான தூதுவரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் ஆலோசகருமான அப்துல் பாசித் சையத் இப்ராஹிம் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான இந்த சந்திப்பு, நேற்று (21) லண்டன் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *