Headlines

வவுனியா தவசிகுளம் மற்றும் காத்தார்சின்னக்குளத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான வரதராஜ் துரைராஜ், வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து நேற்று முன்தினம் (04) தவசிகுளத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வேட்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், இணைப்பாளர் பர்ஹான், ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் நஸார், மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வவுனியா மகாறம்பைக்குள வட்டாரத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரான சுப்பிரமணியம் கணேசனை ஆதரித்து காத்தார்சின்னக்குளத்திலும் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *