Headlines

உடப்பு மக்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேசத்தின் பிரதான அமைப்பாளருமாகிய ஆப்தீன் எஹியாவின் முயற்சியில், உடப்பு பிரதேசத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

சுமார் 20000 ரூபா பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள்  ஆப்தீன் எஹியாவினால் உடப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வின் போது அமைப்பாளர் செல்வநாயகம் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *