Headlines

மக்கள் காங்கிரஸின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

கண்டி மாவட்டத்தின் பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் கடந்த திங்கட்கிழமை (01) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில், பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சுபஹானை ஆதரித்து கரகஸ்கட பிரதேசத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதேவேளை, கரகஸ்கட வட்டாரத்தின் வேட்பாளரான அக்ரம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தின்போது, மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன், உடுதெனிய வட்டாரத்தின் வேட்பாளரான நிலாமுதீன், உடதெல்தோட்ட கலஹா வட்டாரத்த்தின் வேட்பாளர்களான பாசிக், சாதிக் மற்றும் வனஹாப்புவ வட்டார வேட்பாளர் கலீல் ஆகியோரை ஆதரித்தும் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் இடம்பெற்றன.

இந்தக் கூட்டங்களில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட், மக்கள் காங்கிரஸின் பாத்ததும்பர இளைஞர் அமைப்பின் தலைவர் அஸ்மி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *