Headlines

வவுனியா தெற்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  வவுனியா தெற்கு பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு  இன்று (04) வவுனியாவில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பிரதேச வாசிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.      

Read More

மக்கள் காங்கிரஸின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் கடந்த திங்கட்கிழமை (01) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சுபஹானை ஆதரித்து கரகஸ்கட பிரதேசத்தில் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை, கரகஸ்கட வட்டாரத்தின் வேட்பாளரான அக்ரம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தின்போது, மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது….

Read More

“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவோம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அரசாங்கத்துக்கு சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் இன்று மாலை (04) சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே இருந்தது. தற்போது,…

Read More

“வடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவில் நேற்று (04) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி தேர்தலை பொறுத்தவரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அது ஒரு முக்கிய தேர்தலாகவே நாம்…

Read More

வவுனியா மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (03)  இடம்பெற்றது. வவுனியா தம்பா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றினார்.      

Read More

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது… அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பளார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம்…

Read More

“சிறுபான்மைச் சமூகத்தின் அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட ஆட்சித் தலைவர்கள் நன்றிகெட்டதனமாக நடக்கக் கூடாது” திருமலையில் அமைச்சர் ரிஷாட்!

  -ஊடகப்பிரிவு- மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (01) திருமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…

Read More