Headlines

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடரான முன்னெடுப்புக்கள்  தீர்வை நோக்கி 




தோப்பூர் நீனாக்கேணி பிரதேச முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டுவருகையில் அண்மையில் ஏற்பட்ட காணி உரிமை பற்றிய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுகொடுக்கும் ஏற்பாட்டில்

29.05.2017 மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திட்கமைவாக

கடந்த 06.06.2017 ஆளுணர் தலைமையில் நடைபெற்ற தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து

இன்று (12.06.2017) நீணாக்கேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசளில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் புஸ்பகுமார தலைமயில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான அன்வர் , லாஹிர், உதவி பிரதேச செயலாளர், ஆகியோரும் இணைப்பாளர் ரசாக் (நளீமி), முன்னாள் பி.ச.உ.நிஷ்மி, உட்பட பிரதேச வாசிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில்
1. சம்பந்தப்பட்ட இடங்களை நில அளவை செய்வது

2. குடியிருப்புகாணிகளை அடையாளப்படுத்தி தற்காலிக உரிமை வழங்குதல்

3. காணிக்கான உரிமை பேமிட்டுகள் வவழங்குதல்

4. விவசாயகாணிகளுக்கான 5 வருடங்களுக்கு
மேலாக விவசாயம் செய்பவர்களுக்கு காணிக்கான உரிமைய வழங்குதல்.

ஆகிய நான்கு முடிவுகளை மாவட்ட அரச அதிபர் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைக்கு பிரதேச செயலாளர்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவிப்புகளை விடுப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *