Headlines

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடரான முன்னெடுப்புக்கள்  தீர்வை நோக்கி 

தோப்பூர் நீனாக்கேணி பிரதேச முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டுவருகையில் அண்மையில் ஏற்பட்ட காணி உரிமை பற்றிய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுகொடுக்கும் ஏற்பாட்டில் 29.05.2017 மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திட்கமைவாக கடந்த 06.06.2017 ஆளுணர் தலைமையில் நடைபெற்ற தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து இன்று (12.06.2017) நீணாக்கேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசளில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் புஸ்பகுமார தலைமயில்…

Read More

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை மேலும் தரமுயர்த்தி தருவதாக அமைச்சர் றிசாட் வாக்குறுதி.

  ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றி தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் வாக்குறுதி அளித்துள்ளார். நேற்று (11) இரவு 10.30 மணியளவில் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அமைச்சர்.ரிசாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சரும் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர அலியும் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிரருந்தனர். இதன்போது கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாகத்தினருடனான இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மட்டு மாவட்ட இணைப்பாளரும்…

Read More

எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதில் சந்தேகமிருக்கின்றது- பிரதியமைச்சர் அமீர் அலி

எமது பிரச்சினைகளுக்குத்தீர்வு கிடைக்கும் காலத்தில், அத்தீர்வை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கிடையில், அரசாங்கத்தின் உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொண்டு முன்னின்று செயற்படும் பக்குவம், முஸ்லிம்களுக்கு இருப்பது போன்று, தமிழ் மக்களுக்கும் ஏற்பட வேண்டுமென கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சதொச விற்பனை நிலையக்கிளையை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றிய போது, எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு…

Read More

அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் தலைமையில் புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு

அஷ்ஷேக் கைஷான் ரஷாதி அவர்களின் தலைமையின் கீழ் ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், Dr.சனிக், Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் “ஹையதுல் ஹுதா” தொண்டு நிருவணத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. ப.உ. அல்ஹாஜ் இஷாக் ரஹுமான், ஹையதுல் ஹுதா நிருவணத் தலைவர் அஷ்ஷேக் கைஷான் ரஷாதி மற்றும் Dr. சாபி சிஹாப்தீன் ஆகியோர் கடந்த காலங்களில் சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்ட…

Read More

முஸ்லிங்களின் தேசிய தலைவன் ரிசாட் என்பதை நிருபிக்கும் காலம் இது !

கொடுரமான அரக்கர்காளாக மஹிந்த அரசை சித்தரித்து அவர்களின் அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முஸ்லிம் உம்மத்துக்களின் அபிலாஸைகளை வெற்றிகொள்ள நல்லாட்சி அரசின் நிருவுதளுக்காக முதலில் கைகொடுத்த மக்கள் அதிகாரமிக்க அரசியல் சக்திஎன்றால் அது இளம் தலைவர் ஒருவரை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. முஸ்லிங்களின் ஏக தலைவர் நானே,மக்களின் கட்சி எனது கட்சி என தம்பட்டம் அடித்தவர்கள் மஹிந்த அரசில் நாகம் படமெடுத்து ஆடியபோது அந்த ஆட்சியில் அந்த நாகத்தின் ஆட்டத்தை…

Read More

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன்,  தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,கிழக்கு…

Read More